Central Government has made it mandatory to print QR codes on all types of medicine packages  AI generated
இந்தியா

போலி மருந்துகளை ஒழிக்க நடவடிக்கை : ”பேக்கிங்கில் QR Code” கட்டாயம் : 2027 ஜூலை 1ல் அமல், மத்திய அரசு அதிரடி...!

போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்க, அனைத்து வகையான மருந்து பெட்டிகளின் மீதும் QR Code அச்சிடுவதை கட்டாயமாக்கி இருக்கிறது மத்திய அரசு.

Kannan

போலி மருந்துகள் ஒழிப்பு

Government of India has mandated the use of QR codes on the packaging (strip and box level) of critical medications to ensure authenticity and patient safety

சந்தையில் போலி மருந்துகள் உலா வருவதை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டு அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

பேக்கிங்கில் QR Code

மேலும், மருந்துகளின் தரத்தை உறுதி செய்வது. தடுப்பூசிகள் (Vaccines), புற்றுநோய் மருந்துகள் (Anti-cancer drugs), போதைப்பொருள் மற்றும் மனநல மருந்துகள் ஆகியவற்றின் முதன்மைப் பேக்கிங்கில் QR Code-யை மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது.

அனைத்து விவரங்களையும் அறியலாம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் மருந்தின் தனித்துவமான குறியீடு, பிராண்ட் பெயர், உற்பத்தி மற்றும் காலாவதியாகும் தேதி, பேட்ச் எண் (Batch Number) மற்றும் தயாரிப்பாளர் விவரங்களை எளிதாக அறிய முடியும்.

உண்மையான மருந்தை கண்டறியலாம்

நீங்கள் வாங்கிய மருந்தின் அட்டையில் உள்ள விவரங்களும், மொபைல் திரையில் காட்டும் விவரங்களும் சரியாகப் பொருந்தினால், அது அசல் மருந்து என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

அடுத்த ஆண்டு முதல் QR Code

இந்த புதிய நடைமுறை 2027ம் ஆண்டு ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.

நம்பகத்தன்மை உறுதி

இந்த நடவடிக்கை மூலம் சந்தையில் சட்டவிரோதமாக விற்கப்படும் போலி மற்றும் தரம் குறைந்த மருந்துகள் உங்கள் கைக்கு வருவதைத் தடுக்கிறது.

புற்றுநோய் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் போன்ற மிக முக்கியமான மருந்துகளின் நம்பகத்தன்மையை நுகர்வோரே நேரடியாக உறுதி செய்ய முடிகிறது.

துல்லியமான விவரங்கள் கிடைக்கும்

மருந்துகளைப் பற்றிய துல்லியமான விபரங்களை சாதாரண மக்களும் உடனடியாகத் தெரிந்துகொள்ளும் வெளிப்படைத்தன்மை உருவாகிறது

மத்திய சுகாதார அமைச்சகம், Drugs Rules, 1945 சட்டத்தில் திருத்தம் செய்து இந்த மருந்துகளை 'Schedule H2' பிரிவின் கீழ் கொண்டு வந்துள்ளது.

தடுப்பூசிகள், புற்றுநோய் மற்றும் மனநல மருந்துகளுக்கு 2027 ஜூலை 1 முதல் இந்த விதி கட்டாயமாகிறது. ஆன்டிபயாடிக்ஸ் (Antimicrobials) போன்ற மருந்துகளுக்கு 2028 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

============