central government has ordered that the national song ‘Vande Mataram’ must be sung before the start of all government ceremonies and official events google
இந்தியா

“முதலில் வந்தே மாதரம், அடுத்து ஜன கண மன!” : மத்திய அரசு அதிரடி

அனைத்து அரசு விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ (Vande Mataram) நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகப் பாடப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Kannan

தேசிய கீதம்,தேசியப் பாடல் - உள்துறை

Union home ministry mandated that Vande Mataram be played or sung at a raft of official occasions, including during the unfurling of the Tricolour : இந்தியாவில் தேசிய கீதம் (National Anthem) மற்றும் தேசியப் பாடல் (National Song) எப்போது பாடப்பட வேண்டும் என்பதில் நீண்ட காலமாகவே ஒரு விவாதம் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) முக்கியமான அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

முதலில் வந்தே மாதரம் பாடல்

புதிய ‘வந்தே மாதரம்’ விதிமுறையின் படி, (Vande Mataram Protocol): இனி நடைபெறும் அனைத்து அரசு விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும், தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ (Vande Mataram) நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகப் பாடப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தியாகிகளுக்கு மரியாதை

எந்தவொரு அரசு நிகழ்ச்சியும் ‘வந்தே மாதரம்’ பாடலுடன் தொடங்க வேண்டும். இது சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்குச் செலுத்தும் மரியாதையாகக் கருதப்படுகிறது.

நிகழ்ச்சி நிறைவில் தேசிய கீதம்

நிகழ்ச்சி முடிவடையும் போது, அதாவது நிறைவு பெறும் போது, தேசிய கீதமான ‘ஜன கண மன’ (Jana Gana Mana) இசைக்கப்பட வேண்டும்.

இரண்டிற்கும் சம அந்தஸ்து

“ஜன கண மன மற்றும் வந்தே மாதரம் ஆகிய இரண்டுமே சம அந்தஸ்து (Equal Status) கொண்டவை,” என்று அரசியல் சாசன சபை அன்றே அறிவித்திருந்தது.

புரோட்டோகால் மாற்றம்

ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘ஜன கண மன’ நாட்டின் இறையாண்மையைக் குறிக்கிறது. பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘வந்தே மாதரம்’, இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் போது வீரர்களின் தாரக மந்திரமாக இருந்தது.

எனவே, வரலாற்றுச் சிறப்புமிக்க வந்தே மாதரம் பாடலுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த ‘ப்ரோட்டோகால்’ (Protocol) மாற்றப்பட்டுள்ளது.

அரசு விழாக்களில் கட்டாயம்

“நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தையும், சுதந்திரப் போராட்ட வரலாற்றையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவே இந்த முடிவு,” என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பல மாநில சட்டசபைகளிலும், பள்ளிகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தாலும், இப்போது மத்திய அரசு விழாக்களுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முழுமையாக வந்தே மாதரம்

தேசிய கீதத்துக்கு மரியாதை செயல்படுத்துவது போல் வந்தே மாதரம் பாடலுக்கும் அனைவம் எழுந்து மரியாதை செலுத்த வேண்டும்.

1937ல் காங்கிரஸால் நீக்கப்பட்ட நான்கு பத்திகள் உட்பட அனைத்து ஆறு பத்திகளும் இனிமேல் இசைக்கப்படும்

அரசியல் அரங்கில் விவாதம்

சர்ச்சைகள் வருமா? வந்தே மாதரம் பாடுவது குறித்துச் சில மத மற்றும் அரசியல் அமைப்புகள் அவ்வப்போது ஆட்சேபனை தெரிவித்து வருகின்றன.

“யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது,” என்று உச்ச நீதிமன்றம் முன்பு கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய அரசின் இந்தத் திடீர் உத்தரவு அரசியல் அரங்கில் புதிய விவாதத்தைக் கிளப்ப வாய்ப்புள்ளது.

பொதுமக்கள் வரவேற்பு

“பாடல் எதுவாக இருந்தாலும், நோக்கம் தேசபக்திதான். சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கக் காரணமாக இருந்த பாடலைப் பாடுவதில் தவறில்லை,” என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் மத்திய அரசு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

=======