கேடு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகள் :
Samosa Jalebi Side Effects in Tamil : நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்கள், உணவுப் பண்டங்கள், நொறுக்குத் தீனிகள் சில உடல் நலத்திற்கு கேடு(Harmful to health Warning) விளைவிக்கும் வகையில் உள்ளன. காரணம் அவற்றில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும். இனிப்பு மற்றும் நொறுக்குத் தீனிகள் உடல் நலத்தை பாதிக்கும் என்று மருத்துவர்களும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
மருத்துவ ஆய்வு - அதிர்ச்சி தகவல் :
'லான்செட்' மருத்துவ இதழ்(Lancet) நடத்தி வெளியிட்ட ஆய்வில், '2050ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 44 கோடி பேர் உடல் பருமன், நீரிழிவு, ரத்த கொதிப்பு போன்ற நோய்களுக்கு உள்ளாகக்கூடும்' என, எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை(Ministry Of Health), அதிக இனிப்பு, கொழுப்பு மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
சமோசா, ஜிலேபி கடைகளில் எச்சரிக்கை வாசகம் :
இதையடுத்து, சமோசா(Samosa), ஜிலேபி(Jalebi), பக்கோடா போன்றவற்றில் உள்ள சர்க்கரை, கொழுப்புச்சத்துகளின் அளவு, அது உடலுக்கு ஏற்படுத்தும் தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகங்களை அவற்றை விற்பனை செய்யும் கடைகளின் வாசலில் வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நொறுக்குத் தீனிகளுக்கு தடையில்லை :
சோதனை முயற்சியாக மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உணவகத்தில், இந்த எச்சரிக்கை வாசகம் வைக்கப்படுகிது. அதைத்தொடர்ந்து, மற்ற உணவகங்கள் முன்பு வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 'இது வெறும் எச்சரிக்கை தான். குறிப்பிட்ட இந்த உணவுகளுக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை(Samosa Jalebi Not Ban) என்றும், அரசு விளக்கம் அளித்து இருக்கிறது.
கொழுப்பு நிறைந்த உணவுகள் :
’அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ள உணவுகள் அதிகம் சாப்பிடுவதை ஊக்குவிக்கக் கூடாது என்பதற்காகவே, இந்த எச்சரிக்கை(Samosa Jalebi Warning) நடைமுறை துவக்கப்பட்டுள்ளது' எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எச்சரிக்கை வாசகங்கள் :
ஏற்கனவே, சிகரெட் பாக்கெட்டுகள், மது பாட்டில்களில் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. சிகரெட் பாக்கெட்டுகளில், 'புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது(Cigarettes Harmful To Health)' என்றும், மது பாட்டில்களில், 'மது வீட்டிற்கும், நாட்டிற்கும், உயிருக்கும் கேடு' என்ற எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
=====