இந்தியா மீது 50 சதவீத வரி :
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முதலில் 25 சதவீத வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அதை 50 சதவீதமாக உயர்த்தி இருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்த வேண்டும் என்பதே அவரின் முக்கிய நிபந்தனை.
இந்திய பொருட்கள் விலை அதிகரிப்பு :
ஆனால் இதை ஏற்க மறுத்த இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதலை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால், முதலில் 25% வரி பின்னர் 25% அபராத வரி என்று மிரட்டி வருகிறார் டிரம்ப். இதனால், அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து இருக்கிறது.
பிற நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி :
50% வரி விதிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை அமெரிக்க நிறுவனங்கள் நிறுத்த தொடங்கி விட்டன. இதனால், இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. இதற்கான மாற்று வழிகளை தீவிரமாக ஆராய்ந்து வரும் மத்திய அரசு, ஜவுளி ஏற்றுமதியை 40 நாடுகளுக்கு அதிகரிக்க முடிவு செய்து இருக்கிறது. இந்திய பொருட்களின் தரத்தை வெளிப்படுத்தும் வகையில், அந்த நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள திருப்பூரில் இருந்து ஆடைகள் வாங்கும் ஆர்டர்களை அமெரிக்க நிறுவனங்கள் நிறுத்தி இருக்கின்றன. மறு அறிவிப்பு வரும் வரை, ஆடைகள் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக திருப்பூரில் ஆயத்த ஆடை உற்பத்தி, விற்பனையில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
40 நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் :
மாற்று வழியாக பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 40 நாடுகளில் கண்காட்சி கருத்தரங்கு, வர்த்தகர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி, ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தரமான பொருள்கள், நிலையான விற்பனை:
தரமான, நிலையான, புதுமையான ஜவுளிப் பொருட்கள் விற்பனை, ஏற்றுமதி மேம்பாட்டு மையங்கள் அமைத்தல், இந்திய தூதரகங்கள் வாயிலாக அணுகுவது என அடுத்தக் கட்டத்தை நோக்கி, மோடி அரசு நகர்ந்து வருகிறது.
40 நாடுகளுக்கு கூடுதலாக ஏற்றுமதி :
இந்தியாவில் இருந்து ஏற்கனவே 220 நாடுகளுக்கு பல்வேறு விதமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது அடையாளம்
இரட்டை இலக்கத்தில் ஏற்றுமதி :
காணப்பட்டுள்ள 40 நாடுகளில் இந்தியப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இந்த நாடுகளில் 5 - 6 சதவீதமாக உள்ள வர்த்தகம், 10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கப்படும். இதன் வாயிலாக அமெரிக்காவில் ஏற்படும் இழப்பை சரிக்கட்ட முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.
பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, கனடா, மெக்சிகோ, ரஷ்யா, பெல்ஜியம், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஜவுளி, ஆடைகள், ஆபரணக் கற்கள், நகைகள், இறால், தோல் பொருட்கள், காலணி, ரசாயனங்கள், மின்சாதனங்கள், இயந்திரங்கள் ஏற்றுமதியை அதிகரிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
=========