Central government officials no shortage of petrol and diesel supplies Iran-Israel conflict.  google
இந்தியா

இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா? : மத்திய அரசு விளக்கம்

Petrol Diesel Shortage in India : ஈரான் இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தற்போதைக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Rohini

மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி: என்ன பாதிப்பு

Central Government on Petrol Diesel Shortage in India : மோதலை தொடர்ந்து முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் வேளையில் அது இந்தியா மற்றும் உலக எண்ணெய் சந்தைகளில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த வழித்தடம் வழியாக இந்தியா தினமும் சுமார் 2.6 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயைப் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இது மூடப்படுவதால் கச்சா எண்ணெயின் விலை அதிகமாக உயர வாய்ப்பு இருபதாக நிபுணர்களை தெரிவிக்கின்றனர்.மேலும் இந்த எண்ணெய் முதன்மையாக ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத்திலிருந்து வருகிறது.

முன்னணி ஆராய்ச்சி ஆய்வாளர் கூறுவது

ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் இந்தியா மற்றும் உலக எண்ணெய் சந்தைகளில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கெப்ளரின் முன்னணி ஆராய்ச்சி ஆய்வாளர் சுமித் ரிட்டோலியா கூறினார்.

இந்த வழித்தடம் வழியாக இந்தியா தினமும் சுமார் 2.6 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயைப் பெறுகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும் .

ஹார்முஸ் ஜலசந்தி : எண்ணெய் வாங்குவதை அதிகரித்த இந்தியா

கடந்த இரண்டு மாதங்களாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வழங்கப்படும் கச்சா எண்ணெயை வாங்குவதை இந்தியா அதிகரித்து இருந்தது.

பிப்ரவரி மாத இறுதிக்குள், இது ஒரு நாளைக்கு 2.6 மில்லியன் பீப்பாய்களை எட்டியது, இது கடந்த ஆண்டு 2 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது.

பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படாது -மத்திய அரசு

இந்த இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போரால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தற்போதைக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.