India Deal With HAL for Tejas Mk1A Fighter Jets in Tamil 
இந்தியா

'Tejas Mk-1A' : 62,000 கோடியில் 97 விமானங்கள் : HAL உடன் ஒப்பந்தம்

India Deal With HAL for Tejas Mk1A Fighter Jets : இந்திய விமானப்படைக்கு ரூ.62,370 கோடி மதிப்பில் 97 புதிய 'Tejas Mk-1A' போர் விமானங்களை வாங்க HAL நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

Kannan

விமானப்படையில் நவீன போர் விமானங்கள் :

India Deal With HAL for Tejas Mk1A Fighter Jets in Tamil : உலக அளவில் மிகப்பெரிய விமானப்படையை கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்து வருகிறது. எத்தகைய அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் வகையில் காலத்திற்கு ஏற்ப நவீன விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டு வருகின்றன. மிக், தேஜாஸ், ரஃபேல் போர் விமானங்கள் இந்திய வான் எல்லையை காக்கும் கவசங்களாக செயல்பட்டு வருகின்றன.

விடைபெற்ற மிக்-21 விமானங்கள் :

விமானப்படையில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் மிக்-21 ( MiG-21 ) ரக போர் விமானங்களுக்கு விடை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில், 'Tejas Mk-1A' போர் விமானங்களை சேர்க்க மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 97 தேஜாஸ் விமானங்களை வாங்கப்பட உள்ளன. இந்த போர் விமானங்கள் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன.

இந்திய விமானப் படையில் 'Tejas Mk-1A' :

இந்திய விமானப்படைக்கு ரூ.62,370 கோடி மதிப்பில் 97 புதிய 'Tejas Mk-1A' போர் விமானங்களை வாங்க HAL நிறுவனத்துடன் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. முற்றிலும் உள்நாட்டில் தயாராக உள்ள இந்த விமானங்கள், இன்றுமுதல் ஓய்வுபெறும் MiG-21 விமானங்களுக்கு மாற்றாக விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளன.

மிக் விமானங்களுக்கு மாற்றாக தேஜாஸ் :

ஏற்கனவே 2021ம் ஆண்டு பிப்ரவரியில், இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் எம்கே-1ஏ விமானங்களை கொள்முதல் செய்ய ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் ( HAL ) உடன் ரூ.48,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது.

இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, ரூ.62,370 கோடியில் மேலும் 97 தேஜாஸ் எம்கே -1ஏ விமானங்களை வாங்க விமானப்படை முடிவு செய்தது. இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்து இருந்தது.

நவீன அம்சங்களுடன் தேஜாஸ் போர் விமானங்கள் :

இவற்றில் 68 விமானங்கள் ஒற்றை இருக்கை கொண்டவையாகவும், 29 போர் விமானங்கள் இரட்டை இருக்கை கொண்டவையாகவும் இருக்கும்.

அதன்படி, UTTAM, Active Electronically Scanned Array (AESA) control surface actuators, கவச், ரேடார் உள்ளிட்ட 67% உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு விமானத்தில் பொருத்தப்பட உள்ளன. கூடுதலாக 67 புதிய உபகரணங்களும் போர் விமானத்தில் இடம்பெற்று இருக்கும்.

மேலும் படிக்க : ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலையை திறந்து வைத்த ராஜ்நாத் சிங்..!

உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேஜாஸ் :

விமானத்துக்கு தேவையான உபகரணங்கள் இந்தியாவைச் சேர்ந்த 105 நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும். இதன் மூலம் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு நேரடியாகவு,ம் மறைமுகமாகவும் 11,750 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். போர் விமானங்கள் விமானப்படையிடம் ஒப்படைக்கும் பணி 2027 - 2028 துவங்கி அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் படிப்படியாக நிறைவு பெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

=====