Central Government taking final decision today regarding Minister Dharmendra Pradhan will step down AI generated
இந்தியா

”பதவி விலகுகிறாரா தர்மேந்திர பிரதான்” : மத்திய அரசு இன்று இறுதி முடிவு : டெல்லியில் 35வது நாளாக மாணவர்கள் போராட்டம்...!

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? என்பது தொடர்பான இறுதி முடிவை இன்று எடுக்கிறது மத்திய அரசு

Kannan

டெல்லியில் நீடிக்கும் போராட்டம்

நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து டெல்லியில் இளைஞர்கள் மாதக்கணக்கில் போராடி வருகின்றனர். தடியடி, கண்ணீர் புகை தாக்குதல் என எத்தகைய ஒடுக்குதலையும் எதிர்கொள்ள இளைஞர்கள் தயாராக இருக்கின்றனர்.

மாணவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்

எனவேதான் அவர்கள் போராட்டம் தீவிரம் பெற்று வருகிறது. தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை, புதிய சட்டம், தேசிய தேர்வு ஆணையம் அமைத்தல், மாணவர்களுக்கு இழப்பீடு, வயது தளர்வு, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகள் வலுத்துள்ளன.

கரப்பான் பூச்சி கட்சி நிபந்தனை

போராட்டங்களை கைவிட வேண்டுமானால் 3 முக்கிய நிபந்தனைகளை சிஜேபி கட்சியினர் முன்வைத்து வருகிறார்கள்.

பொதுத்தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை, தவறுகளுக்கு பொறுப்பேற்பு, மாணவர்கள் உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றை கொண்ட புதிய சட்டம்,

தேசிய தேர்வு முகமையை கலைத்து விட்டு சட்ட வரம்புக்குட்பட்ட தேசிய தேர்வு ஆணையம் அமைக்க வேண்டும்

வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து, தள்ளிவைப்பு போன்றவற்றால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு இழப்பீடு, வயது வரம்பு தளர்வு உள்ளிட்ட சலுகைகள் அளிக்க வேண்டும்.

மேலும் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை பிரதானமாக பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

இந்தசூழலில் போராட்டாக்காரர்களிடம் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் மத்திய அரசு, மாணவர்களின் ஒருசில கோரிக்கைகளை ஏற்க ஒப்புக் கொண்டது.

மத்திய அரசு பரிசீலனை

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் குறித்து இன்று முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது இதற்கான தீர்வினை மாணவர்களிடம் மத்திய அரசு வைக்கும் எனத் தெரிகிறது.

தொடரும் சிஜேபி போராட்டம்

தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து பின்வாங்க சிஜிபி கட்சியினர், மாணவர்கள் தயாராக இல்லை. எனவே, 35வது நாளாக அவர்கள் போராட்டம் தொடர்கிறது.

மத்திய அரசு இன்று எடுக்கும் முடிவினை பொருத்தே, போராட்டம் நிறைவு பெறுமா அல்லது தொடருமா என்பது தெரிய வரும்.

===============