ஆந்திராவில் கோவில் நிர்வாகம் பக்தர்களிடம் கேள்வி
chandira babu naidu orderதிருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தில் உள்ள குறை, நிறைகள் குறித்து பக்தர்களிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டு வருகிறது.
அதாவது, ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களிலும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் உள்ளனவா என்பது குறித்து கோயில் நிர்வாகத்தினர் பக்தர்களிடையே கருத்துகளை கேட்டு வருகின்றனர்.
சந்திரபாபு நாயுடு உத்தரவு
இதன் அடிப்படையில் நிறை, குறைகளை ஆராய்ந்து சரி செய்ய வேண்டுமென முதல்வர் சந்திரபாபு நாயுடு கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாரி சேவகர்கள் மூலம் திருமலைக்கு வரும் பக்தர்களிடம் நேரடியாக கேள்விகளை கேட்டு கருத்துக்களை சேகரித்து வருகின்றனர்.
பக்தர்களிடம் கருத்துக் கேட்பு
இதன்மூலம் கோவில் நிர்வாகத்தை சரியான முறையில் வழிநடத்தலாம் என்பதால், கோவில் நிர்வாம் மற்றும் ஆந்திர மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
17 வகையான கேள்விகள் கேட்கப்படுகிறது
இதில் குறிப்பாக தரிசனம், ஆர்ஜித சேவைகள், கல்யாண கட்டா, அன்னதானம், பிரசாதம், தங்கும் விடுதிகள், போக்குவரத்து, தேவஸ்தான ஊழியர்கள் நடந்து கொள்ளும் முறை, லக்கேஜ் மைய வசதி, தனியார் ஓட்டல்களில் உள்ள விலைப்பட்டியல் போன்றவை குறித்து மொத்தம் 17 கேள்விகள் பக்தர்களிடம் கேட்கப்படுகிறது.
அதற்கு பக்தர்கள் பதிலளித்து வரும் நிலையில், இந்த முடிவிற்கு திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர மாநில அரசுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.