Chennai IIT Alumni Raghuraman Kannan has been honoured and felicitated by American National Academy News in Tamil Google
இந்தியா

சென்னை IIT மாணவருக்கு அமெரிக்காவில் கௌரவம் : குவியும் வாழ்த்து!

Chennai IIT Alumni Raghuraman Kannan : சென்னை ஐஐடி முன்னாள் மாணவரான ரகுராமன் கண்ணனுக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் அமைப்பில் கௌரவம் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Baala Murugan

அமெரிக்க நேஷனல் அகாடமியில் இந்தியருக்கு கவுரவம்

Chennai IIT Alumni Raghuraman Kannan : அமெரிக்காவில் செயல்படும் நேஷனல் அகாடமி ஆப் இன்வென்டர்ஸ் அமைப்பு, மனித குலத்தின் மேன்மைக்காக கண்டுபிடிப்புகளை உருவாக்கும் விஞ்ஞானிகளுக்கான உயர் அமைப்பாகும்.

இதில் உறுப்பினராக நியமிக்கப்படுவது, விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் கவுரவம். அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சியாளர் ரகுராமன் கண்ணன் இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கு புதிய வழிமுறை

இவர் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய வழிமுறைகளை உருவாக்கியவர். தனது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் நான்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் தொடங்கியுள்ளார்.

இந்தியருக்கு அமெரிக்க கவுரவம்

இவர் தற்போது அமெரிக்காவின் மிசோரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம், அமெரிக்காவில், குறிப்பாக உலகளாவிய சுகாதார துறைகளில், அதிநவீன ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பை எடுத்துரைக்கிறது.

சிகிச்சைக்கு பேருதவி

நுரையீரல், கருப்பை, மார்பகம், கணையம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் சிகிச்சையில் இவரது கண்டுபிடிப்புகள் பேருதவியாக இருக்கின்றன.

குவியும் பாராட்டு

ரகுராமன் கண்ணன் சென்னை ஐஐடியில் வேதியியல் பிரிவில் எம்எஸ் பட்டம் பெற்றவர். இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியராகிய இவரின் கடின உழைப்பிற்கு அமெரிக்காவில் அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், இவர் அனைவருக்கும் முன்னுதரணமாக இருக்கின்றார் என்றும் இவரின் இந்த கவுரவத்திற்கு இந்தியர்கள் பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.