Chennai to Bengaluru is just a 1 hour and 13-minute journey - Ashwini Vaishnaw's statement! Source : Google
இந்தியா

ரயில்வே, தமிழகத்திற்கு ரூ.7,611 கோடி : அஸ்வினி வைஷ்ணவ்!

Ashwini Vaishnaw on Chennai To Bengaluru: மத்​திய பட்​ஜெட்​டில், தமிழக ரயில்வே திட்​டங்​களுக்கு ரூ.7,611 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ள​தாக ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்ளார்.

Baala Murugan

காணொலி வாயிலாக அஸ்வினி வைஷ்ணவ் உரை

Ashwini Vaishnaw on Chennai To Bengaluru Train in Budget 2026 : மத்​திய பட்​ஜெட்​டில், ரயில்வே மண்​டலங்​கள் வாரி​யான ஒதுக்​கீடு குறித்து ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், புதுடெல்​லி​யில் இருந்து காணொலி வாயி​லாக மத்​திய பட்​ஜெட்​டில் தமிழக ரயில்வே திட்​டங்​களுக்கு ரூ.7,611 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இது, 2009-14-ம் ஆண்​டில் காங்​கிரஸ் ஆட்சிக் காலத்​தில் ஒப்​பிடும்​போது 9 மடங்கு அதி​க​மாகும் என்று தெரிவித்தார்.

அதிவேக ரயில் தடங்கள்

முக்​கிய நகரங்​களை இணைக்​கும் வகை​யிலான 7 வழித்தடங்​களில் புல்​லட் ரயில் திட்​டங்​களை மத்திய அரசு செயல்​படுத்​த உள்​ளது. இதன்​படி சென்​னை- பெங்​களூரு வழித்​தடம், சென்​னை- ஹைத​ரா​பாத் வழித்​தடம் என 2 புல்​லட் ரயில் திட்​டம் செயல்​படுத்​தப்பட உள்​ளன.

மணிக்கு 359 கி.மீ. வேகம்

இவை மணிக்கு 350 கி.மீ. வேகத்​தில் இயக்​கப்​படும் வித​மாக, அதிவேக ரயில் வழித்​தட​மாக வடிவ​மைக்​கப்​படும். சென்னை - பெங்​களூரு​வுக்கு ஒரு மணி நேரம் மற்​றும் 13 நிமிடம் பயண நேர​மாக இருக்​கும் என்று தெரிவித்துள்ளார்.

அம்​ரித் பாரத் ரயில் சேவை

சென்னை- ஹைத​ரா​பாத்​துக்கு பயண நேரம் 2.55 மணி நேர​மாகும். ஹைத​ரா​பாத் - சென்னை - பெங்​களூரு நகரங்​களை இணைக்​கும் வகை​யில் இந்த புல்​லட் ரயில் திட்​டம் இருக்​கும்.

இதன் ​மூல​மாக, தென் இந்​திய மாநிலங்​களில் போக்​கு​வரத்​து, சுற்​றுலா, கல்வி என ஒட்​டுமொத்தமாக பொருளா​தார வளர்ச்​சியை ஏற்​படுத்​தும். தமிழகத்​தில் தண்​ட​வாளம் அமைத்​தல், நிலைய மேம்​பாடு உள்ளிட்ட பல்​வேறு பணி​கள் ரூ.35,701 கோடி மதிப்​பில் நடைபெறுகின்​றன.

அம்​ரித் பாரத் நிலையம் திட்​டத்​தின் கீழ், 77 நிலை​யங்​கள் மேம்படுத்தப்​படு​கின்​றன. மேலும் பல அம்​ரித் பாரத் ரயில் மற்​றும் வந்​தே​பாரத் ரயில்​களின் சேவை​களுக்​காக திட்​ட​மிடப்​பட்​டுள்​ளன.

24% நிலமே தமிழக அரசு வழங்கியுள்ளது

தமிழகத்​தில் இது​வரை 97 சதவீதம் மின்​மய​மாக்​கல் பணி நிறைவடைந்​துள்​ளது. விரை​வில் 100 சதவீதம் மின்​மய​மாக்​கல் பணி நிறைவடை​யும். ரயில்வே திட்​டங்​கள், கட்​டு​மானத்​துக்கு தமிழக அரசு ஆதரவு தேவைப்படு​கிறது. ரயில்வே திட்​டங்​களுக்கு தேவைப்படும் 4,346 ஹெக்​டர் நிலத்​தில், இது​வரை 1,052 ஹெக்​டர் நிலம் கையகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

24 சதவீதம் அளவு நிலமே தமிழக அரசு வழங்​கி​யுள்​ளது. 100 சதவீதம் நிலம் கையகப்​படுத்த ஆதரவு அளிக்க தமிழக அரசுக்கு வேண்​டு​கோள் விடுக்​கிறோம்.

அத்​திப்​பட்டு - புத்​தூர், மன்​னார்​குடி - பட்​டுக்​கோட்​டை, தஞ்​சாவூர் - பட்​டுக்​கோட்டை ஆகிய புதிய ரயில் பாதைககளுக்​கான நிலம் கையகப்​படுத்​தல் பூஜ்ஜி​யத்​தில்​தான் இருக்​கிறது. நிலத்தை கையகப்​படுத்​து​வது மூல​மாக, மாநிலத்​தில் போக்​கு​வரத்து வளர்ச்​சிக்கு பேருத​வியாக அமை​யும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

தமிழக அரசிடம் பேச்சு

தெற்கு ரயில்வே கூடு​தல் பொது​மேலா​ளர் விபின்​கு​மார், சென்னை கோட்ட மேலா​ளர் சைலேந்​திர சிங் ஆகியோர் இந்த பட்​ஜெட்​டில் தமிழகம், கேரள ரயில்வே திட்​டங்​களுக்கு ரூ.11,406 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

பல்​வேறு புதிய மற்​றும் அகலப்​பாதை திட்​டங்​களுக்​கும் ஒப்​புதல் அளித்​து, நிதி ஒதுக்​கீடு செய்​துள்​ளன என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, தமிழகத்​தில் நடக்​கும் புதிய ரயில் பாதை திட்​டங்​களுக்​கான நிலம் கையகப்​படுத்த, தமிழக அரசிடம் தொடர்ந்து பேசி வரு​கிறோம்.

கிளாம்​பாக்​கம் ரயில் நிலை​யப் பணி​கள் நிறைவடைந்து விட்​டன. அடுத்த மாத இறு​திக்​குள் பயன்​பாட்​டுக்கு கொண்​டு ​வரப்​படும். எழும்​பூர் ரயில் நிலைய மேம்​பாட்டு பணி​கள் அடுத்த ஆண்​டுக்​குள் நிறைவடை​யும் என்று அவர்கள் தெரிவித்தனர்.