பருவநிலை மாற்றம் , தூக்கமின்மை இழப்பு
இந்தியாவில் ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணமாக ,இரவு நேரங்களில் கடுமையான வெப்பத்திற்கு மக்கள் ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக ஆண்டுக்கு 84 மணி நேர தூக்கத்தை தமிழ்நாட்டு மக்கள் இழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பு
இந்தியாவிற்கு முதலிடம்
தொடர் காலநிலை மாற்றம் , புவி வெப்பமயமாவதால் ஏற்படும் தூக்க இழப்புக்கு ஆளாகும் உலகின் முக்கிய பகுதிகளில் இந்தியாவும் ஒன்று என கிளைமேட் சென்ட்ரல் அமைப்பின் புதிய ஆய்வறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது
சராசரியாக 56 மணி நேர தூக்கத்தை இழக்கின்றனர்
இந்த அறிக்கையின் தலவல் படி ,உலகளாவில் 2020 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இரவு நேர வெப்பம் காரணமாக சராசரியாக ஒருநபர் ஆண்டுக்கு சுமார் 56 மணி நேர தூக்கத்தை இழந்துள்ளதாகவும் ,இது ஆண்டுதோறும் 7 இரவுகளுக்கான தூக்க இழப்புக்கு சமம் என்று தெரிவித்துள்ளது
அதிகரிக்கும் பருவநிலையுடன் தொடர்புடைய தூக்கமின்மை
இதில் ஒரு இரவுக்கான இழப்பு பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடையது என்கிறது அந்த அறிக்கை. குறிப்பாக, பருவ நிலை மாற்றத்துடன் தொடர்புடைய தூக்க இழப்புகள் இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் 107 நகரங்களில் இந்த ஆய்வு
மேற்கொள்ளப்பட்டதில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தூக்க இழப்பு ஏற்படும் தமிழ்நாட்டில் மிக அதிகமாக பதிவாகி உள்ளது. தென் மாநிலங்களில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் ஆண்டுக்கு 84 மணி நேர தூக்கத்தை இழக்கின்றனர். இதில் இரவு நேர வெப்பத்தால் சராசரியாக ஒருநபர் ஆண்டுக்கு 7.9 மணி நேர தூக்கத்தை இழப்பதாகவும் ஆய்வறிக்கையின் மூலம் தெரிவிக்கப்படுள்ளது
சென்னைக்கு முதலிடம் , தூக்க இழப்பு
இந்த அறிக்கையின் படி ,பெருநகரங்களில் சென்னை 93 மணி நேரம், மும்பை 84 மணி நேரம், கொல்கத்தா 80 மணிநேரமாக அதிகபட்ச ஒட்டுமொத்த தூக்க இழப்பை பதிவு செய்துள்ளன. இதில் பெங்களூரு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தூக்க இழப்பில் (ஆண்டுக்கு 8 மணி நேரம்) முக்கிய பங்கு வகிக்கிறது.
தூக்க இழப்பு , சுகாதாரத்துறை அச்சுறுத்தலாக மாறியுள்ளது
மகாராஷ்டிராவில், சராசரி ஆண்டு தூக்க இழப்பு 76.3 மணிநேரமாகவும், அதில் 5.8 மணிநேர இழப்பு காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையதாகவும் உள்ளது. இதன் மூலம் இரவு நேர வெப்பம் அதிகரிப்பது பொது சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது
பொதுவாக தூக்கமின்மையால் பல்வேறு வகையான உடல் நல பாதிப்புகள ஏற்படுகிறது , உடல் நல ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கியம் அங்கம் வகிக்கிறது , எனவெ சரசாரியாக கிடைக்க வேண்டிய தூக்கம் ஆரோக்கியமான உடல்நலத்திற்கு ஆரோக்கியமான ஒன்றாகும்.
=====================