CJP 'Cockroach Janata Party'.. 40,000 members join - Leaders including Mahua Moitra are interested in joining!  google
இந்தியா

CJP 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'.. 40,000 உறுப்பினர்கள் இணைவு : மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்கள் சேர ஆர்வம்!

விளையாட்டாக 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' உருவாக்கப்பட்டு அது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

Rohini

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP)

இந்தியாவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) என்ற புதிய அரசியல் கட்சியானது தற்போது உருவாகியுள்ளது. இக்கட்சியானது, ஆட்சியின் மீது விரக்தியடைந்த மக்களுக்கான ஒரு இயக்கமாகத் தன்னை முன்னிறுத்தியுள்ளது.

உருவான சில தினங்களிலேயே இக்கட்சியில் 40,000 பேர் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் . இக்கட்சியின் எக்ஸ் பக்கத்தை 15,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

ஆட்சி மீது விரக்தி அடைந்த கட்சி

2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் வேலை செய்த அபிஜித் தீப்கே என்பவர் இந்தக் கட்சியை தொடங்கி இருக்கிறார்

பதிவு செய்யப்பட்ட கட்சி கிடையாது

இது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி கிடையாது என்றாலும், இளைஞர்களால் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கேளிக்கையான கட்சியாகும். ’மதச்சார்பற்ற - சோசலிச - ஜனநாயக - சோம்பேறி’ என்பதே இக்கட்சியின் கொள்கையாகும்.

40,000 உறுப்பினர்களை இக்கட்சி பெற்றுள்ளது

இக்கட்சி உருவான சில தினங்களிலேயே இக்கட்சியில் 40,000 பேர் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொண்டனர். இக்கட்சியின் எக்ஸ் பக்கத்தை 15,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

மேலும் இக்கட்சியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களாக மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் உள்ளிட்டோர் தங்களை இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது

உரிய அங்கீகாரத்தை பெறுமா இக்கட்சி

தனது முதல் மெய்நிகர் GenZ மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. தவிர, நீட் மற்றும் சிபிஎஸ்இ போன்ற தேர்வு மோசடிகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் ஆதரவாக நிற்பதாகவும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில இது வெறும் மீம்காக பேசப்படும் கட்சியா இருக்குமா அல்லது உரிய அங்கீகார்ம் பெறுமா என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது