CJP: No intention to transform into a political party; Abhijit Deepke announces. google
இந்தியா

சிஜேபி: அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணம் இல்லை : அபிஜித் தீப்கே அறிவிப்பு, மக்களுக்கான இயக்கமாக மட்டுமே செயல்படும்..!

சிஜேபியை அரசியில் கட்சியாக் மாற்றும் எண்ணம் இல்லை என்றும் , இது மக்களுக்கான இயக்கமாக மட்டுமே செயல்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்

Rohini

சிஜேபி , அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணம் இல்லை

ஒரு கேளிக்கை கட்சியாக உருவாக்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உருவாக்கப்பட்டு , பல லட்சம் பின்தொடர்பாளர்களுடன் நீட் தேர்வு முறைக்கேடுவிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தது , இந்த போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தரில் 30 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டமாக முன்னெடுத்தது.,

இந்த போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் பல லட்சகணக்கான மாணவர்கள், இளைஞ்ர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் டெல்லி ஜந்தர் மந்தரே மாணவர்களால் ஸ்தம்பித்தது பின்னர் சிஜேபியின் போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் மாணவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருந்தது.

பின்னர் பல நீண்ட நெடிய நாள் போராட்டத்திற்கு பிறகு போராட்டமானது வெற்றியும் கண்டது. இந்த சூழலில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியானது அரசியலில் ஈடுப்படாது என்று அதன் நிறுவனர் அபிஜித் தீப்கே தெர்வித்துள்ளார்

அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளதாவது

எங்கள் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பங்கேற்குமாறு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் எங்களுடைய அடுத்தகட்ட செயல்திட்டம் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்

சிஜேபி மக்கள் இயக்கமாக மட்டுமே செயல்படும்

குறிப்பாக எங்கள் அமைப்பை எவ்வாறு விரிவு படுத்துவது, மக்களின் நலனுக்காக நாம் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் என்ன ,அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் போன்ற முக்கிய முடிவுகள் இந்த ஆலோசனை விவாதத்தில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்

அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணம் இல்லை

தற்போதையை சூழலில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணம் இல்லை என்று நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்திருக்கிறார்

உலகளவில் கவனம் பெற்ற சிஜேபியின் போராட்டம்

நீட் தேர்வு முறைக்கேடுவிற்கு எதிரான சிஜேபியின் கட்சியின் போராட்டம் உலகளவில் ஒரு ஜென்சி போராட்டமாக உருவெடுத்திருந்த நிலையில் இது அரசியல் கட்சியாக மாறுமா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் தற்போது தற்போதைக்கு அரசியல் கட்சியாக மற்றும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

=========================