CJP: Started as a fun initiative—how did it evolve into a massive student protest?  google
இந்தியா

கேளிக்கையாக தொடங்கப்பட்ட cjp : பெரிய மாணவர் போராட்டமாக உருவெடுத்தது எப்படி?..அபிஜித் பின்னால் மாணவர் படை!

நீட் தேர்வு முறைக்கேடுவிற்கு எதிராக மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் மிகப்பெரிய போராட்டத்தி கையில் எடுத்துள்ளனர்

Rohini

கேளிக்கையாக உருவாக்கப்பட்ட கட்சி

நாட்டின் இளைஞர்களையும் , தங்கள் கருத்துகளைத் துணிச்சலாக வெளிப்படுத்துபவர்களையும் கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் கேளிக்கையாக உருவான ஒரு கட்சி இன்று டெல்லியை ஸ்தம்பிக்க வைத்து இருக்கிறது

டெல்லி முழுவதும் இணையதள சேவை முடக்கம் , மெட்ரோ நிலையங்கள் தற்காலிக மூடல் , காவல் தடியடி ., விடிய விடிய மெழுகுவர்த்தி ஏந்தி இப்படி டெல்லியே மாணவர்களின் போராட்ட களமாக மாறியுள்ளது

இப்படி டெல்லியே போராட்ட களமாக மாறியது எப்படி? பார்ப்போம்

நீதிபதி கருத்திற்கு எதிராக , அபிஜித் தீப்கே என்பவரால் , சமூக வளைத்தளங்களில் ”கரப்பான் பூச்சி ஜனதா கட்சி{ cjp}" என்ற கணக்கு ஒன்றை தொடங்கப்பட்டது . கணக்கு ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளயே பல ஆயிர கணக்கான பின் தொடர்பாளர்கள் இந்த கணக்கை பின் தொடர்ந்தனர் , தொடர்ந்து சமூக வளைத்தளம் முழுக்க இது அதிக கவனத்தை ஈர்த்தது

யார் இந்த அபிஜித் தீப்கே

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரை சேர்ந்த அபிஜித் தீப்கே கல்லூரி படிப்பை புனேவிலொ முடித்த நிலையில் , சில ஆண்டுகள் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அதில் தகவல் தொடர்பு குழுவில் பணியாற்றியிருந்தார் அபிஜித் . பின்னர் மேற்படிப்பை பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் முடித்திருக்கிறார்

கவனம் ஈர்த்தப் கட்சி , போராட்டத்தை முன்னெடுத்தது ஏன் ?

இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் இளைஞர்களை ஒட்டுணிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளுடம் ஒப்பிட்டு பேசியதே போராட்டத்திற்கு தூண்டுதலாக அமைந்தது

இந்த கணக்கை உருவாக்கிய அபிஜித் தீப்கே , விரைவில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நீட் தேர்வு முறைக்கேடுவிற்கு எதிராக போராட்டத்தை தொடங்கும் என்று தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் இந்த கட்சி மக்களுக்காகவும் அவர்களில் பிரச்சனைகளுக்காகவும் முன்நிற்கும் என்று அதன் நிறுவனர் அபிஜித் தீப்கே கூறியிருந்தார். இந்த நிலையில் தனது கல்வி பயந்த்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியவுடன் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று கூறியிருந்தார்

கரப்பான் பூச்சி கட்சிக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்து எப்படி ,

கட்சி ஆரம்பித்த நாளிலிருந்தே போராட்டத்தை முன்னெடுத்து வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் , தொடர்ந்து நீடித்து வந்த நீட் தேர்வு முறைக்கேடுவிற்கு எதிராக போராட்டத்தை நடத்தி வந்த நிலையில் கரப்பான் பூச்சி கட்சி , இந்த முறைகேடுவிற்கு எதிராக பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்று அறிவித்திருந்தது ,

அதனடிப்படையில் , டெல்லியில் , நீட் முறைக்கேடுவிற்கு எதிராக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டத்தை அறிவித்தனர்.

போராட்டத்திற்கு வழுசேர்த்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்வின் ஆதரவு

டெல்லி ஜந்தன் மந்தரில் நீட் முறைக்கேடு தொடர்பாக , மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக் வேண்டும் என கூறி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரத போரட்டத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்

இளைஞர்களின் இந்த போராட்டத்திற்கு சமூக ஆர்வலர் சோனம் வாங்சுங் தொடர் உண்ணாவிரத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டது கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டத்திற்கு கூடுதல் வழு சேர்த்தது என்றே சொல்லலாம்

இந்தியா முழுவதும் சோனம் வாங்சுக் வின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்து எப்படி

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டமும் , அவரின் உடல் குன்றிய சூழலிலும் மாணவர்களின் கல்வி நலனுக்காக பேசிய அவரின் போராட்ட குணமுமே பல லட்ச கணக்கான இளைஞர்களை ஜந்தர் மந்தார் நோக்கி படையெடுக்க வைத்து , குறிப்பாக போராட்ட களம் மட்டுமின்றி சமூக வளைத்தளம் முழுக்க கரப்பான் பூச்சி ஜந்தா கட்சியின் போராட்ட முன்னெடுப்புக்கு ஆதர்வு பெருகி வருகிறது

நாடாளுமன்றம் நோக்கிய பயணம் , காவல் துறையின் தாக்குதல் , இணையதள் முடக்கம் , இது அனைத்தும் மாணவர்களின் போராட்டத்திற்காக நடந்தது என்றால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா ?

ஆம் , நீட் முறைகேடுவால் மாணவர்கள் உயிர் நீத்ததும் ,,மறுதேர்விலும் தொடர் குளறுபடி காரணமாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத்ப்போராட்டத்தில் இருந்து காவல் துறையால் அகற்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத்திற்கு

எதிர்ப்பு தெரிவித்தும் , மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கிய பேரணி போராட்டத்தை முன்னெடுத்தனர் சிஜேபி கட்சியினர்

மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் , நாடாளுமன்றம் நோக்கிய சிஜேபி கட்சி மற்றும் மாணவர்கள் , சமூக ஆர்வலர்களின் போராட்டமானது டெல்லியை ஸ்தம்பிக்க வைத்தது , போராட்டத்தின் எதிரொலியாக நாடாளுமன்ற வாயில்கதவுகள் மூடப்பட்டதும், இரு அவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதும் இந்திய அளவில் முக்கிய செய்தியாக கவனம் பெற்றுள்ளது.

பேச்சுவார்தைக்கு அழைத்த ஒன்றிய அரசும் , சிஜேபின் முக்கிய கோரிக்கையும்

இந்த நிலையில் போராட்டததை கைவிட வேண்டும் என்றால் , நீங்கள் மூன்று முக்கிய கோரிக்கைகளான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் மற்றும்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற மூன்று முக்கிய கோரிக்கையை சிஜேபி கட்சி மத்திய அரசிடம் கோரிக்கையாக முன்வைத்துள்ளது

இந்தியா முழுவதும் மாணவர்கள் மற்றும் தலைவர்கள் ஆதரவு , ,

சிஜேபி கட்சியின் போராட்டத்திற்கு டெல்லி மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் , மாணவர் அமைப்பினர் , அரசியல் கட்சி தலைவரகள் என சிஜேபிக்கு பெரும் இளைஞர்களின் ஆதரவு பெரிதளவில் கிட்டியுள்ளது

நீட் தேர்வு முறைக்கேடுவிற்கு முற்றுப்புள்ளி எட்டுமா

20 நாட்களுக்கும் மேலாக தீவரமான போராட்டமாக உருவெடித்துள்ள சிஜேபி கட்சியின் , நீட் தேர்வு முறைகேடுவிற்கு எதிரான போராட்டம் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில் , சிஜேபியின் கட்சியின் கோரிக்கையும் , நீட் தேர்விற்கும் முற்றுபுளி வைக்கப்படுமா என்பதே இளைஞர்க்ளின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது

============================