CM Siddaramaiah announces, Children under 16 banned to use social media in Karnataka google
இந்தியா

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்கத் தடை : டிஜிட்டல் போதையில் இருந்து மீட்க கர்நாடகா அதிரடி!

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது

Kannan

குழந்தைகள் பயன்படுத்த தடை

Karnataka: CM Siddaramaiah announces social media ban for under-16s to prevent adverse effects of mobile use : சிறுவர்கள் சோஷியல் மீடியாக்களை பயன்படுத்த பல்வேறு நாடுகள் தடை விதித்து வருகின்றன. குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதை தடுக்கவும், கல்வியில் செல்போன்களால் ஏற்படும் பாதிப்புகளை களையும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

கர்நாடக அரசு அதிரடி

இந்நிலையில், நமது அண்டை மாநிலமான கர்நாடாகவில் சிறார்கள் சோஷியல் மீடியாக்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கிறார்.

கர்நாடக அரசு 16 வயதுக்குட்பட்டவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வந்தது. இது குறித்து முதலமைச்சர் சித்தராமையா மாநிலப் பொதுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.

உலக நாடுகளில் கட்டுப்பாடுகள்

சிறுவர்கள் சமூக ஊடகங்களையும், மொபைல் போன்களையும் பயன்படுத்துவதில் ஆஸ்திரேலியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகளை முதல்வர் உதாரணமாகக் காட்டினார்.

துணைவேந்தர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த அவர், "இந்த நாட்களில் மாணவர்கள் சமூக ஊடகங்களால் அதிகம் பாதிக்கப்படுவதைக் காண்கிறோம். பல நாடுகள் இதை ஏற்கெனவே செய்துள்ளன" என்று குறிப்பிட்டார்.

குழந்தைகளை பாதிக்கும் மொபைல் போன்கள்

மொபைல் போன்கள், சமூக ஊடக உள்ளடக்கங்கள் இளைஞர்களை போதைப்பொருள் வலையில் சிக்க வைப்பதாகவும், அதுபோன்ற தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்களின் தாக்கத்தைப் பற்றியும் முதல்வர் கவலை தெரிவித்தார்.

மொபைலை விட்டு புத்தகம் எடுங்கள்

குழந்தைகளின் திரை நேரத்தைக் குறைத்து, படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காக 'மொபைலை கீழே வைத்து புத்தகத்தை எடுங்கள்' என்ற திட்டத்தையும் கர்நாடக அரசு தொடங்கியுள்ளது.

கல்வியாளர்கள் வரவேற்பு

சிறார்கள் சோஷியல் மீடியாவை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார் முதல்வர் சித்தராமையா. இது தொடர்பாக மாறுபட்ட விமர்சனங்கள் வரத் தொடங்கி இருக்கின்றன. அதேசமயம் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

=====================