'Cockroach Janata Party' crosses borders - a new trend spreading to Pakistan  google
இந்தியா

எல்லை கடந்த ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ : பாகிஸ்தானிலும் பரவும் புதிய டிரெண்ட்!

“அரசியல் அமைப்பு யாரையெல்லாம் கரப்பான் பூச்சிகளாகக் கருதியதோ, அந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் நாங்கள்” என்ற வாசகங்களுடன் இந்த கணக்குகள் இளைஞர்களை ஈர்த்து வருகின்றன

Rohini

இணையத்தை கலக்கும் cpj கட்சி

இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற நையாண்டி இயக்கம், தற்போது எல்லை கடந்து பாகிஸ்தான் சமூக ஊடகங்களிலும் லட்சகணக்கான பயனர்கள் தொடர்ந்து வருகின்றனர்

பாகிஸ்தானிற்கும் பரவிய 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'

கடந்த மே 16 அன்று இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்த இணைய வழி இயக்கம், ஒரே வாரத்திற்குள் பாகிஸ்தான் இளைஞர்கள் மத்தியிலும் புதிய அரசியல் டிரெண்டாக தற்போது உருவெடுத்துள்ளது.

காக்ரோச் அவாமி கட்சி

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ ஏற்படுத்திய தாக்கத்தால், பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் ‘காக்ரோச் அவாமி கட்சி’ , ‘காக்ரோச் அவாமி லீக்’ மற்றும் ‘முத்தஹிதா காக்ரோச் இயக்கம்’ போன்ற பெயர்களில் நூற்றுக்கணக்கான பக்கங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஓடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கும்

“அரசியல் அமைப்பு யாரையெல்லாம் கரப்பான் பூச்சிகளாகக் கருதியதோ, அந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் நாங்கள்” என்ற வாசகங்களுடன் இந்த கணக்குகள் இளைஞர்களை ஈர்த்து வருகின்றன.

பச்சை மற்றும் வெள்ளை நிறக் கலவையில் கரப்பான் பூச்சி லோகோ

பாகிஸ்தானின் பாரம்பரிய அரசியல் கட்சிகளான இம்ரான் கானின் பிடிஐ, நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்-என் மற்றும் பிபிபி ஆகிய கட்சிகளுக்கு மாற்றாகத் தங்களை முன்னிறுத்தும் வகையில், பச்சை மற்றும் வெள்ளை நிறக் கலவையில் கரப்பான் பூச்சி சின்னத்துடன் லோகோக்களையும் இவர்கள் வெளியிட்டுள்ளனர்.

உச்சநீதிமன்ற கருத்துக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சி

இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, போலி சான்​றிதழ்களை வைத்துக் கொண்டு வேலைவாய்ப்பின்றி திரியும் இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என ஒப்பிட்டுப் பேசினார்.

இதையடுத்து நீதிபதியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவரான அபிஜித் தீப்கே என்பவர் இந்த நையாண்டி அரசியல் அமைப்பைத் தொடங்கினார்.

2 கோடி பார்வையாளர்களை கடந்து இணையத்தில் வைரல்

இந்த கேலிக்கைகாக தொடங்கப்பட்ட இந்த கட்சியானது தொடங்கப்பட சில தினங்களிலேயே 2 கோடிக்கும் அதிகமான பயனாளர்களை பெற்று இணையத்தை கலக்கி வருகிறது

கவனத்தை ஈர்க்கும் கட்சி

தன்னிச்சையாகவும் பரவலாக்கப்பட்ட முறையிலும் கொண்டு செல்லப்படுகிறது. அதிகார வர்க்கத்திற்கு எதிரான இளைஞர்களின் இந்த ஆன்லைன் நையாண்டிப் போராட்டம், தற்போது இருநாட்டு இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

======================