Cockroach Party Founder Abhijit Bichukale UP Election 2027 Announcement source: google
இந்தியா

உ.பி தேர்தலில் 'கரப்பான் பூச்சி கட்சி' போட்டியிடாது: எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவிப்பு!

சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.

Kavitha prasanna

Cockroach Party Founder Abhijit Bichukale UP Election 2027 Announcement

கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, உத்தரப் பிரதேசத் தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியிடாது என்றும், எந்தவொரு கட்சிக்கும் எங்களின் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

2027 உத்தரப் பிரதேசத் தேர்தல்

2027 ஆம் ஆண்டு மே மாதம் 403 இடங்களைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிகாலம் நிறைவடைய உள்ள நிலையில் தேர்தலுக்கான பணிகளும் தீவிரமடைந்துள்ளது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சமாஜ்வாதி

எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.

அதேபோன்று உ.பி.யில் ஆளும் பாஜக அரசும் அங்கு மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது.

தொடக்கத்தில் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரஸிற்கு 26 தொகுதிகளை ஒதுக்கியது சமாஜ்வாதி. ஆனால் காங்கிரஸ் கேட்டதோ 181 தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான், சமீப காலமாக நீட் எதிர்ப்பு, மத்திய அமைச்சர் பதவி விலகக் கோரி போராட்டம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டங்கள் என தேசிய அளவில் புகழ்பெற்ற கரப்பான் பூச்சி கட்சியானது, உத்தரப் பிரதேசத் தேர்தலில் போட்டியிடாது என அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

அபிஜித் தீப்கே செய்தியாளர் சந்திப்பு

அபிஜித் தீப்கே நேற்று சத்ரபதி சம்பாஜி நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தேர்தல்கள் இளைஞர்களை மையப்படுத்தி நடக்க வேண்டும். மேலும் அது சாதி, மதத்துடன் தொடர்பில்லாததாகவும் இருக்க வேண்டும். ஆனால் நாம் இன்னும் எத்தனை காலத்திற்கு சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் போட்டியிடப் போகிறோம் என்று கேள்வியெழுப்பினார்.

மேலும், இந்த உலகம் செய்யறிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் , இந்த தேர்தலை நாங்கள் எதிர்கொள்ளப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

==============