Congress-led UDF coalition, which won 97 seats in the Kerala Assembly elections, is forming the government google
இந்தியா

கேரளாவில் ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் : முதல்வராகிறார் வி.டி. சதீஷன் : UDF 97, LDF 35, BJP 3.....

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 97 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

Kannan

கேரள சட்டசபை தேர்தல்

140 தொகுதிகளை கொண்ட கேரள சட்​டப்​பேர​வை தேர்தலில் 140 தொகு​தி​கள் உள்​ளன. இந்​தத் தேர்​தலில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தலை​மையி​லான இடது​சாரி ஜனநாயக முன்​னணிக்​கும்​(எல்​டிஎஃப்), காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணிக்​கும்​(​யுடிஎஃப்) கடும் போட்டி நிலவியது.

மும்முனைப் போட்டி

ஐக்​கிய ஜனநாயக முன்​னணி​யில் காங்​கிரஸ் 95 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் 27 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. இதர தொகு​தி​கள் கூட்​டணி கட்​சிகளுக்கு வழங்​கப்​பட்​டன.

இதே​போல் இடது ஜனநாயக முன்​னணி சார்​பில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி 86 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. இதர தொகு​தி​களில் கூட்​டணி கட்​சிகள் போட்​டி​யிட்​டன.

தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக 115 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. இதர தொகு​தி​கள் அதன் கூட்​டணி கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​பட்​டன.

ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கூட்டணி

கேரளா​வில் 140 தொகு​தி​களுக்​கும் கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி ஒரே கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற்​றது. இந்​நிலை​யில் வாக்கு எண்​ணிக்​கை​யின் முடி​வில் யுடிஎஃப் கூட்​டணி 97 இடங்​களைக் கைப்​பற்​றி​யது.

காங்​கிரஸ் 63, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் 22, கேஇசி 7, ஆர்​எஸ்பி 3, ஆர்​ஜேடி 1, கேஇசி(ஜே) 1 இடங்​களைக் கைப்​பற்​றி​யுள்​ளது.

காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை

அறு​திப் பெரும்​பான்​மைக்கு 71 தொகு​தி​களில் வெற்றி பெற வேண்​டும் எனும் நிலை​யில், காங்​கிரஸ் தலை​மையி​லான கூட்​டணி 97 இடங்​களைக் கைப்​பற்​றி​யுள்​ள​தால் மீண்​டும் ஆட்​சியை கைப்​பற்ற இருக்​கிறது.

10 ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி

இதற்கு முன்பு யுடிஎஃப் கூட்​டணி ஆட்சி 2011 முதல் 2016 வரை ஆட்​சி​யில் இருந்​தது. அப்​போது உம்​மன் சாண்டி முதல்​வ​ராக இருந்​தார். 10 ஆண்​டு​களுக்​குப் பிறகு அக்​கட்சி மீண்​டும் ஆட்​சி​யில் அமர்கிறது.

மூத்த தலைவர்கள் வெற்றி

கேரள காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வ​ரான ரமேஷ் சென்​னிதலா ஹரி​பாட் தொகு​தி​யில் போட்​டி​யிட்​டார். அவர் இம்​முறை 68,184 வாக்​கு​கள் பெற்று மீண்​டும் அதே தொகு​தி​யில் வெற்றி பெற்​றார்.

முதல்வர் ரேசில் சதீஷன்

கட்​சி​யின் மற்​றொரு மூத்த தலை​வ​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வ​ரு​மான வி.டி.சதீஷன் இம்​முறை பரவூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்​டார். வாக்கு எண்​ணிக்​கை​யின் முடி​வில், அவர் மொத்​தம் 78,658 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றுள்​ளார். இவர் முதல்வராக பொறுப்பேற்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

பினராயி விஜயன் வெற்றி

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தலை​மையி​லான எல்​டிஎஃப் 35 இடங்​களைக் கைப்​பற்றி 2-வது இடத்​தைப் பிடித்​துள்​ளது. முதல்​வர் பின​ராயி விஜயன் தர்​மடம் தொகு​தி​யில் போட்​டி​யிட்​டார். அவர் மொத்​தம் 85,614 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி 26 இடங்​களை​யும், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி 8 இடங்​களை​யும் கைப்​பற்​றி​யுள்​ளது.

பாஜக 3 இடங்​களில் வெற்றி

இந்​தத் தேர்​தலில் பாஜக 3 இடங்​களில் வெற்றி பெற்​றது. திரு​வனந்​த​புரத்​தில் உள்ள நெமோன், கழக்​கூட்​டம், சத்​தன்​னூர் ஆகிய மூன்று தொகு​தி​களில் பாஜக வெற்றி பெற்​றுள்​ளது.

நெமோன் தொகு​தி​யில், பாஜக​வின் மூத்த தலை​வ​ரும் முன்​னாள் மத்​திய அமைச்​சரு​மான ராஜீவ் சந்​திரசேகர் வெற்றி பெற்​றார்.

இவர் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வ​ரும் அமைச்​சரு​மான வி. சிவன்​குட்​டியை 3,590 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்​தார்.

கழக்​கூட்​டம் தொகுதியில், பாஜக மூத்த தலை​வ​ரும், முன்​னாள் மத்​திய அமைச்​ச​ரான வி. முரளீதரனும் வெற்றி பெற்​றார்.

கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லாத மாநிலங்கள்

50 ஆண்​டு​களுக்​குப் பின்​னர் நாட்​டில் கம்​யூனிஸ்ட் கட்​சி​களின் அரசே இல்​லாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.

பொதுவாக மேற்கு வங்​கம், திரிபு​ரா, கேரளா ஆகிய 3 மாநிலங்​களில் ஏதாவது ஒன்​றில் கம்​யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடை​பெறும்.

2011ல் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதேபோன்று, திரிபுராவில் 2018ம் ஆண்டோடு கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தநிலையில், கேரளா​விலும் இடதுசாரிகள் ஆட்சியை பறிகொடுத்து இருக்கின்றன.

முதல்வர் பதவி - நான்கு பேர் போட்டி

முதல்வர் பதவிக்கு போட்டியாக 4 பேர் இருந்தபோதிலும் வி.டி.சதீஷன் இந்தப் போட்டியில் முந்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி மேலிடத்தில் வி.டி.சதீஷனுக்கு அதிக செல்வாக்கு இருப்பதால் அவரே முதல்வராக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

==========