Constituency delimitation is an attempt to destroy the federalism. Opposition to Kanimozhi in the Lok Sabha  google
இந்தியா

மறுவரையறை மசோதா : கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி : மக்களவையில் கனிமொழி கண்டனம்!

தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், மக்களவையில் எம்பி கனிமொழி தனது கருத்துக்களை முன்வைத்தார்.

Rohini

தொகுதி மறுவரையறை எதிர்ப்பு

மக்களவையில் தென் மாநிலங்களைப் பலவீனப்படுத்தி, வட மாநிலங்களுக்கு கூடுத வலுச் சேர்க்கும் மக்களவைத் தொகுதி மறுவரையறை திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு நாடளுமன்றதில் திமுக , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்,

மக்களவையில் எதிர்ப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர், திமுகவினர் கருப்பு உடை அனைத்தும் , மசோதாவிற்கு எதிரான விவாதத்தில் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் திமுகவினர் கருப்பு உடை அணிந்தும், நகலை எரித்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்களவையில் எம்பி கனிமொழி உரை

தொகுதி மறுவரையறை குறித்து மக்களவையில் உரையாற்றிய கனிமொழி , இந்த மசோதா மசோதா கூட்டாட்சியைச் சிதைக்கும் முயற்சி என்றும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் சொல்வது ஒன்றாக இருக்கிறது,

சொல்வது ஒன்று, நடப்பது ஒன்று

ஆனால் மசோதாவில் குறிப்பிட்டிருப்பது வேறு ஒன்றாக இருக்கிறது என்று குற்றம்சாட்டினார் எம்பி கனிமொழி

எம்.பி,தொகுதி மறுவரையறை மற்றும் 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு ஆகியவை இரண்டு ஒன்றாக இணைக்கப்பட்டு இருப்பது ஒரு பொறி. இந்திய நாட்டுப் பெண்களை தேர்தல் தேவைகளுக்காக பாஜக பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார் .

பிரதமரை நோக்கி கேள்வி

மக்களவையில் உரையாடிய கனிமொழி மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2023 அமல்படுத்தப்பட்டதாக நேற்றிரவு 10 மணிக்கு அவசர அவசரமாக அரசிதழில் வெளியிட்டதற்கு என்ன அர்த்தம்?

அவசர தேவை என்ன?

இவ்வளவு காலம் அமைதியாக இருந்துவிட்டு மக்களவையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அரசிதழில் வெளியிடுவதற்கான தேவை என்ன?

அப்படியெனில் இந்த அவைக்கான மதிப்பு என்ன? என்ற தொடர் கேள்வியையும் எழுப்பினர்

எதிர்ப்பை பதிவு செய்த கனிமொழி

தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் திசைத்திருப்பும் வகையில் அவசர அவசரமாக நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை திமுக சார்பாகவும், தமிழ்நாடு சார்பாகவும் நான் எதிர்க்கிறேன். என்று தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களுக்கு செய்யும் சதி

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கிறோம்.

ஆனால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தொகுதி மறுவரையறை மசோதாவுடன் ஒன்றிணைத்து தாக்கல் செய்துள்ளது , மக்கள் தொகையை கட்டுபாட்டில் வைத்துள்ள தமிழகத்திற்கு செய்யும் சதி என்று தெரிவித்தார் ,

ஆகையால், தொகுதி மறுவரையறையை எதிர்ப்பவர்களை மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களாக பாஜக சித்திரிக்கிறது. இந்தியப் பெண்களை மனித கவசமாக பாஜக பயன்படுத்துகிறது.

தொகுதி மறுவரையறை செய்யாமல் தற்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கையில் இருந்து 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்தாமல் 2029 மக்களவைத் தேர்தலில் அமல்படுத்த வேண்டும்என் கனிமொழி கேட்டுக் கொண்டார்.

=============

மேலும் படிக்க :தொகுதி மறுவரையறை தென்மாநிலங்கள் பாதிக்கப்படுவது எவ்வாறு : இந்த திருத்த மசோதா கூறுவது என்ன?