continuing decline in NOTA vote percentage made it clear that it is not popular in public  google
இந்தியா

"NOTA-வுக்கு NO" சொன்ன வாக்காளர்கள் : தமிழகத்தில் 0.41 சதவீதம் பேர் மட்டுமே வாக்களிப்பு : வரவேற்காத பொதுமக்கள்...

நோட்டாவுக்கான வாக்கு சதவீதம் தொடர்ந்து சரிந்து வருவது, அதற்கு மக்களிடம் வரவேற்பு இல்லை என்பதை தெளிவுபடுதப்பட்டு உள்ளது.

Kannan

தேர்தலில் நோட்டா

continuing decline in NOTA vote percentage has made it clear that it is not popular with the public : 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், நோட்டா எனப்படும் யாருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லை என்ற வாய்ப்புக்கு, மக்களிடம் பெரும் வரவேற்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

2013க்கு முன்பு 490 படிவம்

2013ம் ஆண்டுக்கு முன், எந்த வேட்பாளருக்கும் ஓட்டு போட விரும்பாதவர்கள், அதற்கான படிவம் 490ஐ நிரப்பி, தேர்தல் அலுவலரிடம் கொடுக்கும் வசதி இருந்தது.

ஆனால், இந்த நடைமுறை ஓட்டுரிமை ரகசியம் வெளியாவதை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

நோட்டா பொத்தான் அறிமுகம்

எனவே, வாக்களிப்போரின் ரகசியத்தை பாதுகாக்கும் வகையில், 2021ஆம் ஆண்டு நோட்டா என்ற பொத்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

நோட்டாவை விரும்பாத மக்கள்

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவுக்கு 0.75 சதவீதம் வாக்குகள் கிடைத்தன.

நடந்து முடிந்த தேர்தலில், அது 0.41 சதவீதமாக குறைந்துள்ளது. ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 801 பேர் மட்டுமே நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

வரவேற்பு குறைவு

தேர்தல் ஆணைய புள்ளிவிபரப்படி, கடந்த மூன்று லோக்சபா தேர்தல்களிலும் நோட்டாவுக்கு ஓட்டு போடுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு 1.08 சதவீதமாக இருந்த நோட்டா, 2024ல் 0.99 சதவீதமாக குறைந்துள்ளது.

மக்களிடம் அதிருப்தி

நோட்டாவுக்கான வாக்கு சதவீதம் குறைந்து வருவது, மக்கள் அதிருப்தி வெளிப்பாட்டுக் கருவி என்றே கூறப்படுகிறது.

===================