2024ல் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ்
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆட்சிய பறிகொடுத்தது காங்கிரஸ். அதன்பிறகு, நடந்த இரண்டு தேர்தலிலும் ஆட்சிய பிடிக்கவும் முடியல. அதிக இடங்களை கைப்பற்றவும் முடியல.
மாநிலத் தேர்தல்களிலும் தோல்வி
இதேபோல பல மாநிலங்களில சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் தோல்விய சந்திச்சு ஆட்சியை பறிகொடுத்து இருக்கு. தென்னிந்தியாவில் மட்டும்தான் கேரளா, கர்நாடக, தெலங்கானா மாநிலங்களில காங்கிரஸ் ஆட்சியில இருக்கு. வட இந்தியாவில இருக்கிற உத்தர பிரதேசம் தொடங்கி பெரிய மாநிலங்கள் அனைத்திலும் கோலோச்சுறது பாரதிய ஜனதா கட்சிதான்.
காங்கிரசின் ஒரே குற்றச்சாட்டு EVM தான்
தேர்தல் தோல்விகள் இருந்து எழ முடியாத காங்கிரஸ் 12 ஆண்டுகளா சொல்லிக்கிட்டு வர்ற ஒரே குற்றச்சாட்டு என்னன்னா, தேர்தல் ஆணையம், EVM, பாஜக மீது சேற்றை வாரி இறைக்கறது தான்.
வாக்குச்சீட்டு - மார்தட்டிய காங்கிரஸ்
‘வாக்குச்சீட்டு முறைதான் ஜனநாயகத்தின் ரட்சகன்’ அப்படின்னு காங்கிரஸ் தொடர்ந்து முன்வைத்து வந்த வாதம் 28 இடங்களுக்கு நடந்த சட்டமேலவை தேர்தலில் தவிடுபொடியாகி இருக்கு.
பலவீனத்தை கணிக்கத் தவறிய காங்கிரஸ்
தேர்தல்களால் நிலைகுலைந்த காங்கிரஸ், தோல்விக்கான காரணங்கள், தன் பலவீனங்களை சுயபரிசோதனை செய்வதை விடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) முறைகேடு நடப்பதாக புலம்பிக்கிட்டே இருக்கு. 2014ல மத்தியில ஆட்சிய பறிகொடுத்த பிறகு இந்த குற்றச்சாட்டு படிப்படியா அதிகமாகி, இன்னிக்கு மக்களை ஈர்க்க போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்ற நிலைக்கு வந்து நிக்குது.
வாக்குச்சீட்டில் எம்எல்சி தேர்தல்
அண்மையில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பிகார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 28 மேல்சபை இடங்களுக்கு, காங்கிரஸ் கோரிய வாக்குச்சீட்டு முறையில் தான் தேர்தல் நடந்துச்சு.
காங்கிரசை நிராகரித்த படித்தவர்கள்
12 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸை படித்த வாக்காளர்களும் ஆசிரியர்களும், இளைஞர்களும் முற்றிலுமா நிராகரிச்சாங்க.
கர்நாடகாவிலும் படுதோல்வி
ஆட்சியில இருக்கிற கர்நாடகாவிலும் கூட அந்தக் கட்சி தோல்விய தான் சந்திச்சுது. பிகாரிலும் பூஜ்யம் தான். மகாராஷ்டிரவில நாக்பூரில் மட்டும் கடைசிவரை போரடி ஓர் இடத்தை கைப்பற்றியது காங்கிரஸ். அதேசமயம், பாஜக கூட்டணி 16 இடங்களில வாகை சூடியது.
“வாக்குச்சீட்டு முறை வந்தால் நாங்கள்தான் ராஜா, எங்கள் வெற்றிய யாரும் தடுக்க முடியாது” அப்படின்னு மார்தட்டிய காங்கிரசை, மக்கள் விரட்டி அடிச்சு இருக்காங்க.
எதில் தேர்தல் நடந்தாலும் தோல்வி தானா?
“EVM-ல பொத்தானை அழுத்தினாலும் சரி, வாக்குச்சீட்டில குத்தினாலும் சரி, காங்கிரசுக்கு தோல்விதான் அப்படின்னு மக்கள் உணர்த்தி இருப்பதா, பாஜகவினர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிட்டு வர்றாங்க.
காங்கிரஸ் கொண்டு வந்த இவிஎம்
1988-ல் காங்கிரஸ் ஆட்சியில்தான் மின்னணு வாக்கு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு, 2004 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் முழுமையா பயன்படுத்தப்பட்டது.
வெற்றி பெற்றால் அமைதி, தோல்வி அடைந்தால் எதிர்ப்பு
2014 வரை மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இவிஎம் முறையைக் கேள்வி கேட்காத காங்கிரஸ்,அதற்பிறகு படுதோல்விகளை சந்திச்சு வர்றதால, அதை மறைக்க தற்காப்பு உத்தியாகவே வாக்குச்சீட்டு முறைய வலியுறுத்தி வருது.
பாஜக கடும் விமர்சனம்
ஆனால், அந்த தேர்தல் முறையிலும் காங்கிரஸ் தோற்றதை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, “வாக்குச்சீட்டு முறையில் நடந்த மேல்சபை தேர்தலில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வென்றது தெரியுமா?” எனக் கேள்வி எழுப்பினாரு.
‘இயந்திரத்தில் கோளாறு இல்லை, காங்கிரஸின் நம்பிக்கையில்தான் கோளாறு’ அப்படின்னு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் விமர்சிச்சு இருக்காரு.
மோடியின் செல்வாக்கு, தவிக்கும் காங்கிரஸ்
உண்மை என்னன்னா, தேசிய அளவில் பிரதமர் மோடியின் செல்வாக்கு, பாஜக அரசின் நலத் திட்டங்களுக்கு ஈடு கொடுக்க முடியாம காங்கிரஸ் திணறுது. வலுவான தலைவர் இல்லை, தேர்தலில் வெற்றியை பறிக்கும் சிறந்த நிர்வாகிகள் இல்லை.
வலிமை இழந்த இந்தியா கூட்டணி
கட்சி தலைமை பதவியை கார்கேவிடம் ஒப்படைச்சிட்ட ராகுல் காந்தி, லோக்சபா தேர்தலின் போது மட்டும், பிரதமர் வேட்பாளரா முன்னிறுத்த படுறாரு. அதுக்கூட திமுக இருந்தவரை இந்தியா கூட்டணி ஓரளவு வலிமையா இருந்திச்சு.
ஆனா, இப்போ நிலைமை தலைகீழாகி நிற்குது. ஒவ்வொரு தேர்தல் தோல்விக்கும் மின்னணு இயந்திரம் மீது பழிபோடும் காங்கிரஸ் மீது மக்கள் கிட்ட அதிருப்தி அதிகரிச்சு கிட்டே வருது.
வாக்குப்பதிவு இயந்திரங்க பத்தி சந்தேகம் கிளப்பும் காங்கிரஸ், தேர்தல் ஆணையம் ஆதாரத்தை காண்பியுங்க அப்படின்னு அழைப்பு விடுத்தா போறதே கிடையாது. எப்பவும் குற்றம்சாட்டுகிற ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் கேட்ட உறுதிமொழிப் பத்திரத்தை இதுவரை சமர்பிக்கவே இல்லை.
அவதூறு பிரச்சாரங்கள் வெற்றி தராது
மத்தியில ஆட்சிய பிடிக்கணும் அப்படிங்கறது வெறியோட இருக்கிற காங்கிரஸ், அதற்கான உத்திகளை வகுக்காம, வெறும் பாஜக, தேர்தல் ஆணையத்துக்கு எதிரா அவதூறு பிரச்சாரங்கள் மூலம் மக்களை ஈர்க்க நினைக்குது.
காங்கிரசை பொருத்தவரை, சோனியா குடும்பம் தான் கட்சி. அவங்களுக்கு எதிரா கருத்துக்களை தெரிவிக்கிறவங்க, அல்லது விமர்சனம் செய்யுறவங்க கட்சியில இருக்க முடியாது.
ஆர்.பி.என். சிங், ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் மிலிந்த் தியோரா, குலாம் நபி ஆசாத், அமரிந்தர் சிங், ஜிதின் பிரசாதா போன்ற மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டத்தில் இருந்து விலகியத்துக்கு இதுவே முக்கிய காரணம்.
தேர்தல் தோல்வி - காங்கிரசுக்கு சவால்
எனவே, சட்டமேலவை தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கு புதிய சவாலை ஏற்படுத்தி இருக்க. மின்னணு இயந்திரங்களில் தேர்தல் நடந்தால் தான் தோல்வி, சரி வாக்குச்சீட்டு முறையிலும் தோல்வின்னா, அப்போ எப்படி தேர்தல் நடந்தா வெற்றி கிடைக்கும்.
இந்த வாதத்திற்கான பதிலை காங்கிரஸ் தலைமை தான் கொடுக்கணும். வாக்குச்சீட்டு முறையில் கிடைத்த அடி, காங்கிரசுக்கு ஒரு எச்சரிக்கை மணி.
மக்கள் ஆதரித்தால் வெற்றி உறுதி
இவிஎம் மீது பழிபோடுவதை இதோட நிறுத்திவிட்டு, மக்களின் நம்பிக்கையைப் பெறுவதிலும், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் காங்கிரஸ் கவனம் செலுத்தாத வரைக்கும், எந்த முறையில் தேர்தல் நடந்தாலும் மக்கள் கொடுக்கிற தீர்ப்பு இப்படித்தான் இருக்கும்.
இதை தலைமையும், தொண்டர்களும் உணர்ந்து தங்களை மாற்றிக் கொள்ளாத வரை, பாஜகவின் வெற்றிப் பயணம் தொடர்வதை யாராலும் தடுக்க முடியாது.
=================