க்யூட் நுழைவு தேர்வு
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் க்யூட் தேர்ச்சி பெற வேண்டும் .இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ,என்டிஏ ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
வரும் கல்வியாண்டிற்கான தேர்வு
அதன்படி, வரும் கல்வியாண்டில் (2026-27) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 11 முதல் 31-ம் தேதி வரை நடைபெறு இருகிறது .இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜன. 3-ல் தொடங்கி பிப். 26-ம் தேதி வரை நடைபெற்றது.
15 லட்சம் பேர் தேர்வை எழுதுகின்றனர்
நாடு முழுவதும் இந்த தேர்வை சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடு
தற்போது இந்த தேர்விற்கான ஹால் டிக்கெட்டானது வெளியிடப்பட்டிருக்கிறது ,இந்நிலையில், தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
அவற்றை https://cuet.nta.nic.in/ எனும் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
இதுசார்ந்த கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
என்டிஏ இலவச எண்கள் அறிவிப்பு
ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
==========