வரி விதிப்பு என்ற போர்வையில் இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்க முயற்சிக்கிறது. ஆனால், இது அந்த நாட்டிற்கு தோல்வியை தான் தந்து வருகிறது. இதனால், அதிபர் டிரம்ப் கடுப்பின் உச்சத்தில் இருக்கிறார். ரஷ்யா, சீனா, பிரேசில் என அமெரிக்காவின் பகையாளிகளை இந்தியா அடுத்தடுத்து சந்தித்து தனது ராஜதந்திர முயற்சிகளில் வெற்றி பெற இருக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சியால் பொறாமை :
இந்தநிலையில், மத்திய பிரதேச மாநிலம் ரைசன் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ இந்தியா வேகமாக வளர்ச்சி பெறுவதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் அதனை விரும்பவில்லை. எப்படி இந்தியா வேகமாக முன்னேறலாம் என கேள்வி கேட்கின்றனர்.
இந்தியர்களின் கைகளால், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலை, மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களை விட அதிகமானதாக இருக்க வேண்டும் என பலர் முயற்சி செய்கின்றனர். இதனால், பொருட்கள் விலை உயர்ந்தால் அவற்றை உலக நாடுகள் வாங்காது என நினைக்கின்றனர். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
வேகமான வளர்ச்சியில் இந்தியா :
ஆனால், இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது என்பதை உறுதியுடன் கூறுகிறேன். பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்து 24 நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறோம். இது தான் இந்தியாவின் பலம்.
பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்டினோம் :
அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் மதத்தை கேட்டு கொன்றனர். பயங்கரவாதிகள் செய்த செயலை பார்த்து நாம் அவர்களை கொன்றோம், பழி தீர்த்தோம். இனி இந்தியாவிடம் வாலாட்டினால் என்ன நடக்கும் என்பத அவர்களுக்கு புரிய வைத்தோம்” இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
=====