Delhi Cockroach Protest: Cannot be heard as an urgent matter; Supreme Court refuses. google
இந்தியா

டெல்லி கரப்பான் பூச்சி கட்சி போராட்டம் : அவசர வழக்காக விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு...!

நீட் தேர்வு முறைகேடுவிற்கு எதிராக சிஜேபி கட்சி பேரணியின் போது போரட்டக்காரர்கள் மீது காவல் துறையில் தாக்குதலுக்கு எதிரான மனுவில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Rohini

நீட் தேர்வு முறைகேடுவிற்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம்

நீட் தேர்வு முறைகேடுவிற்கு எதிராக டெல்லியில் கரப்பாம்ன் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர், கரப்பான் பூச்சி கட்சியின் இந்த போராட்டத்திற்கு ஆதாரவாக பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் , இளைஞர்கள் , சமூக ஆர்வலர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி ப்டையெடுத்து வருகின்றனர்

பேரணி நடத்தியவர்கள் மீது காவல் துறை தாக்குதல்

நீட் தேர்வு முறைக்கேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்கார்கள் மீது காவல் துறை தடியடி , கண்ணீர் புகை குண்டு வீச்சி ஆகியவற்றில் பல மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதற்கு எதிரான வழக்கு

டெல்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தப்பட்ட விவகாரத்தில் இந்த நடவடிக்கையை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்த்தில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது

அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்த நிலையில் டெல்லி போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது ,

மேலும் தடியடி தொடர்பான வீடியோக்களை தான் வைத்துள்ளதாக வழக்கறிஞர் கூறிய நிலையில், வீடியோக்களை பார்க்க நேரம் இல்லை, பார்க்கவும் விரும்பவில்லை என தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

இந்தியா முழுவதும் தீவிரமடைந்திருக்கும் போராட்டம்

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி , நீட் தேர்வு முறைக்கேடுவிற்கு எதிராக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் , நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் பல்வேறு இளைஞர்கள் , மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்

===================