லஞ்சத்தை எதிர்க்க இளைஞரின் புதுமையான முயற்சி:
நாடு முழுவதும் லஞ்சம் ஒரு பெரிய தலைவலியாக இருக்க கூடிய சூழ்நிலையில் அரசிங்கம் அதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இதற்கிடையே டெல்லியில் உள்ள மாணவர் ஒருவர் ஒரு புதிய செயலியை உருவாக்கி அதனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அவர் கூறுவது லஞ்சம் நாட்டுக்கும் நட்டு மக்களுக்கும் ஒரு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது எனவே இந்த மாதிரியான செயலிகளால் மக்கள் துணிச்சலாக புகார் கூற முன்னவருவார்கள் என கருதுகிறேன் என அவர் குறிப்பிட்டார்
பெயர் வெளியிடாமல் புகார் அளிக்கும் வசதி :
இந்த இணையதளத்தின் முக்கிய அம்சம், புகார் அளிப்பவர்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாதது.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கப்பட்ட சம்பவங்கள், பணம் கொடுக்க நேர்ந்த அனுபவங்கள் அல்லது லஞ்சம் கொடுக்க மறுத்த நிகழ்வுகள் போன்றவற்றை எளிதாக பதிவு செய்யலாம்.
புகார் அளிக்க விரும்புவர்கள் தங்களது முகவரி புகார் அளிக்க வேண்டிய அலுவல் வட்டம் ஊர் மாவட்டம் போன்ற தகவல்கள் ஜூடுதல் மட்டும் போதுமானது .அந்த புகார் இணையத்தில் பதிவாகிவிடும்
மக்களிடையே அதிகரிக்கும் வரவேற்பு :
இந்த திட்டம் மக்களுக்கு மிகவும் அவசியம் எனவும் இந்த திட்டத்தின் மூலமாக எளிய மக்களும் அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட முடியும் எனவும் இது போன்ற செயலிகளால் மக்கள் பயமின்றி அவரகளவே முன்வந்து புகார் அளிப்பார்கள் என கருதப்படுகிறது
இதனிடியே இந்த திட்டத்தை கூறுத்தி மக்களிடையே கேட்கையில் அவகிரகள் இந்த திட்டத்தை அவர்கள் வரவேற்பதாக தெரிவித்தனர்
இந்த இணையதளத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆகஸ்ட் 17ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் 258 நகரங்களில் இருந்து 646 லஞ்ச குற்றச்சாட்டுகள் இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
துறை வாரியான லஞ்ச புகார்கள் :
இணையதளத்தில் பதிவான தகவல்களின்படி, சில துறைகள் மீது அதிகளவில் லஞ்ச குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆர்டிஓ (RTO) துறை – 88 புகார்கள்
வருவாய் மற்றும் நில ஆவணங்கள் துறை – 69 புகார்கள்
பாஸ்போர்ட் அலுவலகங்கள் – 43 புகார்கள்
மாநகராட்சி அலுவலகங்கள் – 29 புகார்கள்
இந்த அளவு புகார்கள் இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளது
டிஜிட்டல் தளத்தில் தொடங்கிய மாற்றத்தின் குரல் :
ஒரு மாணவரின் சிந்தனையில் உருவான இந்த முயற்சி, லஞ்சத்திற்கு எதிராக பொதுமக்களின் குரலை ஒருங்கிணைக்கும் புதிய தளமாக மாறியுள்ளது.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காண முயலும் ஆர்யன் நிஷாத்தின் இந்த முயற்சி,முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.