Dharmendra Pradhan steps down; celebrations among students at the protest site; the youth brigade triumphs.  cjp;twitter
இந்தியா

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான் : போராட்டக் களத்தில் மாணவர்கள் கொண்டாட்டம் : சாதித்த இளைஞர் படை..

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் , மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார்

Rohini

சாதித்த இளைஞர் படை

நீட் தேர்வு குளறுபடி, முறைக்கேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் பதவி விலக வேண்டும் , நீட் தேர்வால் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பிடாக தர வேண்டும் உள்ளிட்ட முக்கியமான் கோரிக்கைளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்

பதவி விலகினார் மத்திய கல்வி அமைச்சர்

நீட் தேர்வு முறைக்கேடு தொடர்பாக டெல்லி மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டமானது ஏற்பட்டு வந்த நிலையில் , மாணவர்க்ளின் கோரிக்கைக்கு செவி சாய்த்து மத்திய கல்வி அமைச்சர் த்ர்மேந்திர பிரதான் பத்வி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்

உற்சாக களிப்பில் போராட்ட களத்தில் மாணவர்கள்

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக டெல்லியில் 30 நாட்களுக்கும் மேலாக இந்தியா முழுவதும் போராட்டமானது தீவிரமடைந்து வரும் நிலையில் , மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகியதை அடுத்து டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் சென்னையில் மாணவர்கள் போராட்ட களத்தில் வெற்றி களிப்பில் கொண்ட்டாடி வருகின்றனர்

ஜென்சி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

மாணவர்களில் இந்த தொடர் போராட்டம் , ஆளும் கட்சியினருக்கும் ஒரு பின்னடைவு என்று மாநிலங்களைவை எதிர்கட்சி தலைவர் மல்லி கார்ஜுன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் இருந்தவாறே வாழ்த்து தெரிவித்திருக்கிறார்

மேலும் அச்சத்தை மீறி தேசத்தில் ஓவ்வோரு மூலையிலும் போரடிய மக்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் , இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்ரி என்றும் , பொறுமையாக , அமைதியாக போராடியவர்களுக்கும் வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்

மத்திய அரசுடன் 3ம் கட்ட பேச்சுவார்த்தி நடத்தும் கரப்பான் ஜனதா கட்சி

இன்னும் சற்று நேரத்தில் மத்திய அரசுடன் மூன்றாம் கட்ட பேச்சுவாரத்தை நடத்த இருக்கிறது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி , மற்ற கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுடம் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறது

அரசியல் தலைவர்கள் பலரும் ஜென்சி போராட்டத்திற்கு வாழ்த்து

மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் , ஜென்சி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று பாராட்டி வாழ்த்து செய்தி தெரிவித்து வருகின்றனர் .

====================================