Union Cabinet approved the payment of 78 days wages as Diwali bonus to railway workers. 
இந்தியா

78 நாட்கள் தீபாவளி போனஸ் : ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு பரிசு

Railway Employees Diwali Bonus 2025 : ரயில்வேயில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனசாக வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

Kannan

தீபாவளி போனஸ் - 78 நாட்கள் :

Railway Employees Diwali Bonus 2025 : உலக அளவில் மிக அதிக அளவில் தொழிலாளர்களை கொண்ட துறையாக இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது. ரயில்வேயில் 11 லட்சத்து52 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ரயில்வே துறையில் வேலை செய்யும் gazetted அல்லாத ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டு, அதன்படி, 78 நாட்கள் ஊதியத்தை வழங்க வழங்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

11 லட்சம் ரயில்வே ஊழியர்கள் :

ரயில்வேயின் செயல்திறனை ஊக்குவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 11 லட்சம் ஊழியர்கள் போனஸ் பெறுவார்கள் என்பதால், பண்டிகை கால செலவுகளுக்கு இந்தத் தொகை உதவியாக இருக்கும். ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு பிறகு, வியாபாரம் சூடு பிடித்துள்ள நிலையில், 11 லட்சம் குடும்பங்களுக்கு தீபாவளி போனஸ், வர்த்தகத்தை மேலும் வளமாக்கும். ஜவுளி, எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும்.

ஒவ்வொருவருக்கும் ரூ.17, 951 கிடைக்கும் :

ஒவ்வொரு ரயில்வே ஊழியருக்கும் இந்த போனஸ் தொகை, அதிகபட்சமாக 78 நாட்களுக்கு ரூ.17,951 வரை வழங்கப்படும். இந்தத் தொகை கிடைப்பதால், ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். தண்டவாளங்களை பராமரிக்கும் பணியாளர்கள், ரயில் இயக்குநர்கள், ரயில்வே காவலர்கள், நிலைய மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன் போன்றவர்கள், அத்துடன் குரூப் 'சி' பிரிவைச் சேர்ந்த பிற ஊழியர்கள் வரை அனைவருக்கும் போனஸ் கிடைக்கும்.

மேலும் படிக்க : சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் 20 பெட்டிகள்: மக்கள் வரவேற்பு

போனஸ் வழங்க ரூ.1,866 கோடி ஒதுக்கீடு :

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்(Diwali Bonus) வழங்க 1,866 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. 2023-2024 நிதி ஆண்டில் ரயில்வேயின் வருவாய் திருப்திகரமாக இருந்தது. 1614 மில்லியன் டன் சரக்குகளை கையாண்ட இந்திய ரயில்வே, 7.3 பில்லியன் பயணிகளை கொண்டு சென்றிருக்கிறது.

===================