Diwali festivities, Gold worth 85,000 crore rupees was sold across the country 
இந்தியா

லட்சம் தொட்டாலும் குறையாத மவுசு : 85,000 கோடிக்கு தங்கம் விற்பனை

தீபாவளி பண்​டிகையை ஒட்டி நாடு முழு​வதும் 85 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தங்​கம் விற்​பனை ஆகி உள்​ளது.

Kannan

புதிய உச்சங்களை தொடும் தங்கம்

India's jewellery markets sparkled this DIwali, Rs. 85,000 crores sales in Nationwide : சர்வதேச நிலவரம், ரூபாயின் மதிப்பு சரிவு, அமெரிக்காவின் கூடுதல் வரி, மத்திய வங்கிகள், தங்கத்தை வாங்கி குவிப்பது போன்ற காரணங்களால் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சவரன் விலை ஒரு லட்சத்தை எட்ட இன்னும் சில ஆயிரங்கள் மட்டுமே உள்ளன. எப்போது வேண்டுமானாலும் தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்தை தொட்டு விடும் என்ற நிலை தான் உள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு

இந்​தியா முழு​வதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்ய 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) அறி​முகம் செய்​யப்​பட்​டது. 5%, 12%, 18% மற்​றும் 28% என 4 அடுக்​கு​களாக இருந்த ஜிஎஸ்டி கடந்த மாதம் 22ம் தேதி 5%, 18% என 2 அடுக்​கு​களாக மாற்​றம் செய்யப்பட்டது.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் லாபம்

இது ஜிஎஸ்டி 2.0 என்​றும், நாட்டு மக்​களுக்​கான தீபாவளிப் பரிசு என்றும் பிரதமர் நரேந்​திர மோடி அறி​வித்​தார். ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக பல்வேறு பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது. கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி உள்​ளிட்ட பொருட்​களின் விற்​பனை அதி​கரித்து உள்ளது.

தங்கம், வெள்ளி விற்பனை அதிகரிப்பு

அந்த வகையில், இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு தீபாவளி விற்​பனை நாடு முழு​வதும் அதி​கரித்​துள்​ளது. வட மாநிலங்​களில் 5 நாட்​களுக்கு தீபாவளி பண்​டிகை கொண்​டாடப்​பட்டது. குறிப்​பாக தீபாவளிக்கு 2 நாள் முன்​ன​தாக தந்​தேரஸ் விழா கொண்​டாடப்​பட்டது. . லட்சுமி தேவி அருள் கிடைப்பதற்காக இந்த 2 நாட்களில் தங்கம், வெள்ளி, பொருட்களை புதிதாக வாங்கி வீட்டில் பூஜை செய்வது வழக்கம். அதன்படி, இந்தநாட்களில் தங்கம், வெள்ளி வட இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகி உள்ளன.

85,000 கோடிக்கு தங்கம் விற்பனை

இரண்டு நாட்களில் மட்டும், நாடு முழு​வதும் 50 முதல் 60 டன் அளவுக்கு தங்க நகைகள் விற்​பனை​யாகி உள்​ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.85 ஆயிரம் கோடி எனக் கூறப்படுகிறது.கடந்த ஆண்​டின் விற்​பனையை விட 35 முதல் 40 சதவீதம் ஆகும். ஆனால், விற்​பனை​யான நகை​யின் அளவைப் பொருத்த அளவில் கடந்த ஆண்​டின் அளவிலேயே இருந்​தது. இதற்கு கடுமை​யான விலை உயர்வே காரணம்.

5 நாட்களில் ரூ. ஒரு லட்சம் கோடி!

தீபாவளி பண்டிகை நேற்றுடன் முடிந்து விட்ட நிலையில், கடந்த 5 நாட்களில் தங்கம் விற்பனை 100 முதல் 120 டன்னை எட்​டும் என்றும், அதாவது, 1 லட்​சம் கோடி முதல் ரூ.1.35 லட்​சம் கோடி ரூபாய் அளவு விற்பனை ஆகி இருக்கும் என்று நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளி விற்பனை அதிகரிப்பு

இந்த ஆண்டு தங்​கத்​தின் விலை கடுமை​யாக உயர்ந்​து இருப்பதால், வெள்ளி பொருட்கள விற்பனை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக வட இந்தியாவில் வெள்ளி பொருட்கள் 2 மடங்கு அளவு விற்பனை ஆகி உள்ளது. வெள்ளி விலையும் உச்சத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டிவி, பிரிட்ஜ் ரூ.10 ஆயிரம் கோடி

ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்த ஆண்டு தீபாவளி காலத்​தில் டிவி, பிரிட்​ஜ், வாஷிங் மெஷின், செல்​போன், ஏசி உள்​ளிட்ட மின்​னணு சாதனங்​கள் விற்​பனை ரூ.10 ஆயிரம் கோடியைத் தாண்டி உள்​ளது. மின்னணு சாதனங்களின் தயாரிப்பு, கொள்முதல், விற்பனை அதிகரித்து இருப்பதால், ​25 லட்​சம் பேர் கூடுதலாக வேலை வாய்ப்பை பெற்​றுள்​ளனர்.

==============