DMK boycotting the India Alliance meeting, its future is in question as many leaders are dissatisfied google
இந்தியா

INDIA Bloc : ”திமுக புறக்கணிப்பு”, மம்தா, கெஜ்ரிவால், பினராயி அதிருப்தி : இண்டியா கூட்டணி, எதிர்காலம் கேள்விக்குறி...!

இண்டியா கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணித்து இருக்கும் நிலையில், பல தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதால், அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

Kannan

இண்டியா கூட்டணி

லோக்சபா தேர்தலுக்கு முன்பு பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட இண்டியா கூட்டணி, தற்போது கடுமையான பிளவுகளையும் வீழ்ச்சியையும் நோக்கி நகர்ந்து வருகிறது.

வலுவான இண்டியா கூட்டணி

காங்கிரஸ், திமுக, திமுகவின் கூட்டணி கட்சிகள், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சிவசேனா, என்சிபி போன்ற கட்சிகளின் கூட்டணியோடு தொடங்கியது தான் இண்டியா அணி.

பெங்களூருவில் தொடங்கி பாட்னா வரை கரம் கோர்த்த தலைவர்கள், மக்களவை தேர்தலில், 234 தொகுதிகளை கைப்பற்றி, பாஜகவுக்கு சவாலாக நின்றது.

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத பாஜக, நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆதரவோடு தான் என்டிஏ ஆட்சியை அமைத்துள்ளது.

பலவீனம் அடைந்த இண்டியா கூட்டணி

தேர்தல் தோல்விக்கு பிறகு, இண்டியா கூட்டணியில் சலசலப்பு தொடங்கியது. ஆம் ஆத்மி வெளியேற மம்தாவும் கூட்டணியை புறக்கணித்தார்.

திமுக விலகியது

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு கொடுத்து, ஆட்சியில் பங்கெடுத்து இருக்கிறது.

இதன் காரணமாக, இண்டியா கூட்டணியில் பிளவுபட்டு நிற்கிறது. டெல்லி இண்டியா கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணித்து விட்டது.

திமுக கடும் விமர்சனம்

காங்கிரஸ் மீது திமுக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருவதால், இண்டியா கூட்டணியில் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கிறது.

மம்தா பானர்ஜியின் திரிணமூல், இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சிவசேனா, என்.சி.பி போன்ற கட்சிகளின் பலவீனமும் கூட்டணியின் எதிர்காலத்தை மங்கலாக்கி வருகின்றன.

கேள்விக்குறியாகும் காங்கிரஸ் எதிர்காலம்

28 கட்சிகளோடு கைகோர்த்து நின்ற இண்டியா கூட்டணி, இப்போது காங்கிரஸ் கட்சியோடு தனித்து விடப்படும் சூழல்நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

கூட்டணி அஸ்திவாரம் திமுக

கூட்டணியின் அஸ்திவாரமாக இருந்த திமுக விலகியது தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு தான்.

உதிரிக் கட்சிகளுடன் இண்டியா கூட்டணி

டெல்லியில் மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்தில் இன்று நடைபெறும் இண்டியா கூட்டணி ஆலோசனை திமுக பங்கேற்காத நிலையில், விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் பங்கேற்கின்றன.

ஒருபுறம் திமுகவின் புறக்கணிப்பு என்றால், மறுபுறம் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் தோல்விக்குப் பின் பெரும் பிளவுகளைச் சந்தித்து வருகிறது.

கேரளாவில் தங்களது கடைசி கோட்டையையும் இடதுசாரிகள் இழந்து நிற்க, டெல்லி தோல்வியால் ஆம் ஆத்மியின் செல்வாக்கும் சரிந்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, என்.சி.பி கட்சிகளின் உடைப்பு எனப் பிராந்திய கட்சிகளின் பலவீனமும் ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியை முடக்கியுள்ளது.

கேள்விக்குறியாகும் காங்கிரஸ் எதிர்காலம்

2029 மக்களவை தேர்தலை காங்கிரஸ் யாரோடு சேர்ந்து சந்திக்க போகிறது, வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும், மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியுமா என்று பார்த்தால், எந்த கேள்விக்கும் பதிலே இல்லாத சூழல்தான் இப்போது நிலவுகிறது.

=================