DNA testing confirmed that terrorist Umar Mohammed carried out the car bomb attack in Delhi  
இந்தியா

டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்தியது உமர்தான்: DNA சோதனையில் உறுதி

டெல்லியில் 13 பேர் பலியாக காரணமான கார் குண்டு வெடிப்பு பயங்கரவாதி உமர் முகமது நிகழ்த்தியது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

Kannan

மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்

DNA Test Confirms Dr Umar Drove i20 That Exploded Near Red Fort : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடந்த இரு வாரங்களாக காஷ்மீர், உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் நடத்திய அதிரடி சோதனையில் வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ஆதிலை கைது செய்தபோது, அவர்கள் மிகப் பெரிய தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியிருந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, 2,900 கிலோ வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன

தாக்குதல் பின்னணியில் மருத்துவர்கள்

தீவிர விசாரணையின் போது ஆதில் கொடுத்த தகவலின் அடிப்படையில், புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் முஸாம்மில் அகமது உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். இவர்களோடு தொடர்பில் இருந்த லக்னோவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் சயீதும் கைது செய்யப்பட்டார். இவர்கள் மூவரும், ஹரியானாவின் அல் பலாஹ் மருத்துவ பல்கலையில் ஒன்றாக பணியாற்றியவர்கள் என தெரிந்தது.

பயங்கரவாதி உமர் முகமது

இதே பல்கலையைச் சேர்ந்த டாக்டர் உர் முகமதுவுக்கும் இவர்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்து, அவரை போலீசார் தேடி வந்த நிலையில், டெல்லியில் செங்கோட்டை அருகே சிக்னலில் நிறுத்தப்பட்டு இருந்த கார் வெடித்து சிதறியது. வெடிப் பொருட்களுடன் வந்த காரை ஓட்டி வந்த நபர் திட்டமிட்டு தாத்குதலை அரங்கேற்றியது அம்பலமானது.

13 பேர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்

இந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதலில் ஈடுபட்ட சதிகாரர்களில் ஒருவர் கூட தப்ப முடியாது, நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்கள்.

டெல்லியில் கார் குண்டு வெடிப்பு

சிசிடிவி ஆதாரங்களை ஆய்வு செய்த போது, காரை டாக்டர் உமர் முகமது ஓட்டி வந்தது உறுதி செய்யப்பட்டது. கார் வெடித்து சிதறிய போது, உமர் காரில் இருந்தாரா அல்லது அதற்கு முன்பு தப்பிச் சென்றாரா என்பது உறுதி செய்யப்படாமல் இருந்தது.

உமர் முகமது மீது சந்தேகம்

இது பயங்கரவாத தாக்குதல் தான் என்பதை மத்திய அரசு உறுதி செய்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெடித்து சிதறிய ஹூண்டாய் ஐ20 கார் மற்றும் அதனை ஓட்டி சென்று தாக்குதல் நடத்தியது ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் உமர் என்று சந்தேகிக்கப்பட்டது.

குண்டு வெடிப்பை நிகழ்த்திய உமர்

அந்த கார் பலருக்கும் கைமாறி இருந்தாலும் கடைசியாக உமர் தான் வாங்கி இருந்தான். அவன் எங்கு இருக்கிறான் எனத் தெரியவில்லை. இதனிடையே, காரில் சிதறி கிடந்த உடல் பாகங்களை சேகரித்து டிஎன்ஏ மாதிரி மூலமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் உமரின் குடும்பத்தினரின் டிஎன்ஏ மாதிரியும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த 2 டிஎன்ஏவும் தற்போது ஒத்துப்போய் உள்ளது.

டிஎன்ஐ பரிசோதனை உறுதி

உமரின் டிஎன்ஏ மாதிரி அவரது தாய் மற்றும் சகோதரரின் டிஎன்ஏவுடன் 100 சதவீதம் பொருந்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் டில்லி கார் வெடிப்பை நிகழ்த்தியது உமர் தான் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும், குண்டு வெடிப்புக்குப் பிறகு உமரின் தாயார் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களை காவலில் வைத்துள்ள போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

==============