Donald Trump Warns Iran 1000 Missiles Ready Centcom Attacks 80 Sites 2026 google
இந்தியா

"என்னை கொல்ல நினைத்தால் ஈரான் மீது 1000 ஏவுகணைகள் பாயும்!" : அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை!

"என்னைக் கொல்ல முயன்றால் ஈரான் மீது 1000 ஏவுகணைகள் பாயும்" - அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை. 80 இடங்களில் அமெரிக்கா குண்டுவீச்சு.

Kavitha prasanna

"If they try to kill me, 1,000 missiles will rain down on Iran" – US President Donald Trump warns. US carries out bombings at 80 locations.

என்னை கொலை செய்ய முயற்சித்தால் ?

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், "என்னை கொலை செய்ய முயற்சித்தால் ஈரான் தேசத்தை நோக்கிப் பாய 1000 ஏவுகணைகள் தயாராக உள்ளன" என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதனால் மேற்காசியப் பகுதியில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இஸ்ரேல் கொடுத்த எச்சரிக்கையும், ட்ரம்பின் பதிவும்

அதிபர் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் புதிய சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்காவுக்கு இஸ்ரேல் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், அண்மையில் மறைந்த ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள், ‘அமெரிக்க அதிபர் ட்ரம்பை கொல்வோம்’ என்ற வாசகம் எழுதிய பேனர்களை ஏந்தி சென்றனர்.

இந்த சூழ்நிலையில், தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

அதில், "அமெரிக்காவில் அதிபர் பொறுப்பில் உள்ளவரை என்னை படுகொலை செய்யவோ அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபடவோ ஈரான் துணிந்தால், அதனை எதிர்கொள்ளும் வகையில் அந்த தேசத்தை நோக்கிப் பாய 1000 ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஈரானின் அனைத்துப் பகுதிகளையும் தாக்குவதற்கான அதிரடி உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டு விட்டது. அமெரிக்க ராணுவமும் அதற்கு தயாராக உள்ளது. இந்த தாக்குதல் உத்தரவு ஓராண்டு காலம் அமலில் இருக்கும், தேவைப்பட்டால் அது மேலும் நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது" என்று குறிபிட்டுள்ளார்.

======