அமலுக்கு வரும் Penalty Point
Driving License New Procedure Rules in Tamil : இந்தியாவில் சாலை விபத்துகளைக் குறைக்கவும், போக்குவரத்து மீறல்களை கட்டுப்படுத்தி அதனை மேம்படுத்தவும் 'Penalty Points' முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எந்த முறையில் இந்த புள்ளிகள் கணக்கிடப்படும்
புதிய நடைமுறையில், ஒவ்வொரு போக்குவரத்து விதிமீறலுக்கும் குறிப்பிட்ட புள்ளிகள் ஓட்டுநரின் கணக்கில் சேர்க்கப்படும்.
இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குள் மொத்தம் 12 புள்ளிகள் சேர்ந்தால் ஓட்டுநர் உரிமம் ஒரு ஆண்டுக்கு தடை செய்யப்படும்.
மீண்டும் அதே அளவு புள்ளிகள் சேரும் பட்சத்தில், லைசென்ஸ் ஐந்து ஆண்டுகள் வரை ரத்து செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரின்க் அண்ட் டிரைவ் எவ்வாறான தண்டனை
குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற கடுமையான குற்றங்களுக்கு அதிகபட்சமாக 12 புள்ளிகள் வழங்கப்பட்டு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படலாம் என்றும் கூறியுள்ளது
டிஜிட்டல் கண்காணிப்பு முறை
இந்த Penalty PointsIntelligent Traffic Management System (ITMS) போன்ற டிஜிட்டல் கண்காணிப்பு முறைகளுடன் இணைக்கப்படும்.
நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விதிமீறல்கள் தானாக பதிவு செய்யப்பட்டு, e-challan முறையின் மூலம் ஓட்டுநரின் கணக்கில் புள்ளிகள் சேர்க்கப்படும்
புள்ளி முறையை அமல்படுத்திய மற்ற நாடுகள்
புள்ளி முறையை அமல்படுத்திய பிற நாடுகளாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் இருக்கின்றன.
குறிப்பாக இந்த புள்ளி முறை, சாலை பாதுகாப்பை மேம்படுத்த முக்கிய காரணமாக உள்ளது.
அதேபோல் இந்தியாவிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், ஓட்டுநர்கள் விதிகளை கடைபிடிக்கும் பொறுப்புணர்வு அதிகரித்து, சாலை விபத்துகளை குறைக்க உதவும் என்ற எண்ணத்தில் இந்த முறை அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது