East India Company, which led to British colonial rule and ruled India, has once again been paralyzed by bankruptcy google
இந்தியா

East India Company : ”பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி திவால்”: காலனி ஆதிக்கத்தின் அடித்தளம், 425 ஆண்டுகால வரலாறு

பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்திற்கு வழிவகுத்து, இந்தியாவை ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனி, திவாலானதால், மீண்டும் ஒருமுறை முடக்கப்பட்டுள்ளது.

Kannan

East India Company, which led to British colonial rule and ruled India, has once again been paralyzed by bankruptcy இந்தியாவை அடக்கி ஆண்ட வரலாற்று பின்னணி கொண்ட நிறுவனம் தான் 'கிழக்கிந்திய கம்பெனி'. காலனி ஆதிக்கத்தின் அடித்தளமாக கால்பதித்த இந்த நிறுவனம் தான் இந்தியாவே ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ய வழி ஏற்படுத்தி கொடுத்தது.

பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனி ( கிபி. 1600 )

இங்கிலாந்து மகாராணியாக இருந்த முதலாம் எலிசபெத் அனுமதியோடு, பிரிட்டீஷ் வணிகர்கள் ஒன்று சேர்ந்து 1600ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வர்த்தக நிறுவனமாக, பிரிட்டீஷ்க கிழக்கிந்திய கம்பெனியை தொடங்கினார்கள்.

வர்த்தகத்தில் பெரிய ஆதிக்கம்

இந்தியாவில் கால்பதித்த இந்த கம்பெனி, 1757ம் ஆண்டு நடந்த பிளாசி போருக்கு பிறகு வங்காளத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஒருகட்டத்தில் உலக வர்த்தகத்தில் பாதியை கிழக்கிந்திய கம்பெனி தான் கட்டுப்படுத்தியது எனலாம்.

மிகப்பெரிய தனியார் ராணுவம்

1800-களின் தொடக்கத்தில், பிரிட்டிஷ் இராணுவத்தை விட 2 மடங்கு பெரிய ( சுமார்2.5 லட்சம் வீரர்கள்) தனியார் ராணுவத்தை கிழக்கிந்திய கம்பெனி வைத்து இருந்தது என்றால், அதன் செல்வாக்கு என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.

கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம்

வன்முறை மற்றும் தவறான ஏற்றுமதி கொள்கைகளால் 3 கோடி இந்தியர்களைக் கொன்ற 'பெரிய வங்காளப் பஞ்சத்திற்கு' (Bengal Famine) இந்த நிறுவனமே காரணமாக இருந்தது என்பதும் அதிர்ச்சியான உண்மை. இந்தியா முழுவதும் ஆங்கிலேயர்கள் காலூன்ற இந்த நிறுவனமே காரணமாக இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை

1857ல் மூடப்பட்ட கிழக்கிந்திய கம்பெனி

1857 சிப்பாய் கலகத்திற்குப் பிறகு, 1858-ல் இதன் ஆட்சி பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 1874-ல் இந்நிறுவனம் முழுமையாக கலைக்கப்பட்டது. வர்த்தக நிறுவனமாகத் தொடங்கி, சாம்ராஜ்யத்தையே கட்டியெழுப்பி, இந்தியர்களுக்கு பெரும் துயரத்தை அளித்ததில் கிழக்கிந்திய கம்பெனியின் பங்கு பெரியதாகும்.

152 ஆண்டுகளுக்கு பிறகு....

கிட்டத்தட்ட 152 ஆண்டுகளாகசெயலற்ற நிலையில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியை, 2010ம் ஆண்டில் பிரிட்டிஷ்-இந்திய தொழிலதிபரான சஞ்சீவ் மேத்தாவால் வாங்கப்பட்டு, செயல்பாட்டிற்கு வந்தது. இந்தியாவை ஆண்ட ஒரு நிறுவனம் இப்போது ஒரு இந்தியரால் ஆளப்படுகிறது என்பது உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளாய் கொண்டாடப்பட்டது.

நஷ்டம் அடைந்த கிழக்கிந்திய கம்பெனி

லண்டன் மேபெர் பகுதியில் கிழக்கிந்திய கம்பெனியை தேநீர், உணவுப் பொருட்கள், சாக்லேட்டுகள் விற்கும் கடைகளாக மாற்றி சஞ்சீவ் மேத்தா நடத்தி வந்தார். ஆனால், இப்போது அந்த நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்து இருக்கிறது.

கிழக்கிந்திய கம்பெனி திவால்

10 கோடிக்கு மேல் கடனாளியாகி விட்ட இந்த நிறுவனம், திவாலானதாக அறிவிக்கப்பட்டு, மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.

வரலாற்றின் கருப்பு பணம் விடைபெற்றது

காலனி ஆதிக்கம், கம்பெனி நிர்வாகம், முதலாளித்துவ மனப்பாங்கை உலகிற்கே கற்றுக் கொடுத்த கிழக்கிந்திய கம்பெனி, நிரந்தரமாக முடக்கப்பட்டு விடைபெற்று இருக்கிறது.

=============