ED Frozen Reliance Anil Ambani Group Assets Worth Rs 1,120 Crore in Yes Bank Fraud Case Reliance
இந்தியா

மீண்டும் அனில் அம்பானியின் சொத்து முடக்கம் : 10 ஆயிரம் கோடியா?

ED on Anil Ambani Group Assets : முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியின் 9 ஆயிரம் கோடி சொத்து முடக்கத்தை தொடர்ந்து, தற்போது 1 ஆயிரத்து 120 கோடி சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Baala Murugan

அனில் அம்பானி வழக்குப்பதிவு

ED Frozen Reliance Anil Ambani Group Assets : இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான, 'ராகாஸ்' நிறுவனங்களுக்கு, 'யெஸ்' வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது.

ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில், அனில் அம்பானி ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி செய்து விட்டதாக இரண்டு வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்தது.

சோதனை நடத்திய அமலாக்கத்துறை

இதைத்தொடரந்து, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. முகேஷ் அம்பானி வீடு, அலுவலகம் உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அவருக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜர் ஆகுமாறு சம்மன் அனுப்பி இருந்தது. அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார்.

10 ஆயிரத்து 117 கோடி சொத்துக்கள் முடக்கம்

அதேவேளை, அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், பணமோசடி வழக்கு தொடர்பாக அனில் அம்பானியில் ரூ. 9 ஆயிரம் கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கியுள்ள நிலையில், அனில் அம்பானியின் சொத்துக்களில் மேலும் ரூ. 1 ஆயிரத்து 120 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இதன் மூலம் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட அனில் அம்பானி சொத்துக்களின் மதிப்பு ரூ. 10 ஆயிரத்து 117 கோடியாக அதிகரித்துள்ளது.

அனில் அம்பானியின் தொடர் சொத்து முடக்கத்திற்கு, நெட்டிசன்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

====