தொடர் உபயோகத்தில் ஸோஹோ :
Zoho Office Suite in Education Ministry : மத்திய கல்வித்துறையில் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களின் சாஃப்ட்வேரை பயன்படுத்த வேண்டாம் என முன்னர் உத்தரவிடப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக ஸோஹோவின் சாஃப்ட்வேரை பயன்படுத்த வேண்டும் என்று அனைத்து பிரிவு அதிகாரிகளுக்கும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் குழப்பம் :
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்(Donald Trump Tariffs on India) நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை போட்டுள்ளார். அதுமட்டுமின்றி அமெரிக்க நிறுவனங்களில் இருக்கும் பணியிடங்களில் அமெரிக்கர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்ற கொள்கையில் டிரம்ப் உள்ளார். இதன் தொடக்கப்புள்ளியாக தான் எச் 1 பி விசா கட்டணத்தை டிரம்ப் உயர்த்தி உள்ளார். இதனால், டிரம்பின் வரி மற்றும் எச் 1பி விசா கட்டண உயர்வுஅமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் பலர் நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர்.
பிரதமர் மோடி அறிவுரை :
இதனால் பிரதமர் மோடி, உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார். அந்த வகையில் தான் மத்திய கல்வித்துறை அமைச்சகம்(Education Ministry Of India) சார்பில் அனைத்து அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சுதேசி இயக்கத்தை ஆதரிக்க வேண்டும் மோடி கூறியிருந்த நிலையில், ஏற்கனவே மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டவர்கள் ஸோஹோ நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
மேலும் படிக்க : Zoho : ஜீரோவில் இருந்து ஹீரோ ஆன ஜோஹோ! யார் இந்த ஸ்ரீதர் வேம்பு?
கல்வித்துறையில் ஸோஹோ :
இதைத்தொடர்ந்து, ‛‛மத்திய கல்வி அமைச்சகத்தில் அனைத்து அதிகாரிகளும் ஸோஹோ ஆஃபீஸ் சூட்டை (Zoho Office Suite) தான் பயன்படுத்த வேண்டும் என்றும் டாக்குமென்டேஷன் தயாரிப்பு பணிகளுக்கு வெளிநாடுகளின் சாப்ட்வேரை பயன்படுத்த கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஸோஹோவின் தயாரிப்பை பயன்படுத்துவதன் மூலம் உள்நாட்டு தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஸோஹோவின் சாஃப்ட்வேர்களை தொடர்ந்து மத்திய அரசு ஒவ்வொரு துறையாக உபயோகப்படுத்த தொடங்கியுள்ள நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் தனது கட்டுப்பாட்டில் உள்ள கல்வித்துறையில் ஸோஹோ(Zoho Software) சாப்ட்வேரை பயன்படுத்தும்படி அறிவுரை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.