Eight MPs, including Manickam Tagore, were suspended forunruly behavior in Lok Sabha Session 2026 ANI
இந்தியா

அமளி துமளியான மக்களவை : மாணிக்கம் தாகூர், 8 எம்பிக்கள் சஸ்பெண்ட்

Manickam Tagore And 7 Other MPs Suspended From Lok Sabha Session 2026 : நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டதால், மாணிக்கம் தாகூர் உள்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Kannan

நாடாளுமன்ற மக்களவை

Manickam Tagore And 7 Other MPs Suspended From Lok Sabha Session 2026 in Parliament Today : மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சில கருத்துகளை தெரிவித்தார். அதற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது.

சபாநாயகரை நோக்கி காகிதங்கள் வீச்சு

சில காங்கிரஸ் எம்பிக்கள் சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதங்களை வீசியதாகக் கூறப்படுகிறது, இதனால், அவைக்குள் மேலும் பதற்றத்தை அதிகரித்தது. இந்த இடையூறால், அவை நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் தடைபட்டு, தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

மக்களவை ஒத்திவைப்பு

பகல் 12 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்ட பிறகு பிற்பகல் 3 மணிக்கும், அதன்பிறகு, நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

8 எம்பிக்கள் சஸ்பெண்ட்

இது தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் மற்றும் ஹிபி ஈடன், அமரீந்தர் சிங், ராஜா வாரிங், குர்ஜீத் சிங் அவுஜ்லா மற்றும் கிரண் குமார் ஆகிய 8 பேரை சஸ்பெண்ட் சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார்.

காங்கிரஸ் கட்சி முடிவு

மீதமுள்ள நாட்களுக்கு அவர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது. இதற்கிடையில், பாஜக எம்பிக்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகரிடம் முறைப்படி புகார் அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "மோடிஜி அதிர்ச்சியில் இருக்கிறார். கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடந்த (அமெரிக்க-இந்திய) வர்த்தக ஒப்பந்தத்தில் நரேந்திர மோடி நேற்று இரவு கையெழுத்திட்டுள்ளார்.

முக்கிய விஷயம் என்னவென்றால், நமது பிரதமர் சமரசம் செய்து கொண்டுள்ளார்” என்று குற்றம்சாட்டினார்.

======