Bihar Assembly Elections 2025 Date Announcements in Tamil : பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தது. SIR பற்றிய விவாதங்களும் தொடர்ந்து வந்தன. இந்தநிலையில் இன்று மாலை தலைமைத் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்தது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியதாவது :
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இருகட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6 ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறும். இதற்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 10 ஆம் தேதி தொடங்குகிறது(Bihar Assembly Elections 2025 Date). வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசிநாள் அக்.17ஆம் தேதி. வேட்புமனுக்கள் 18 ஆம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. 20 ஆம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசிநாள்.
அதேபோன்று 122 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத்தேர்தல் நவம்பர் 11 ஆம் தேதி நடத்தப்படுகிறது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 13 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசிநாள் அக்.20 ஆம் தேதி. வேட்புமனுக்கள் 21 ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். 23 ஆம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசிநாளாகும்.
தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. தேர்தல் அமைதியாகவும் நியாயமாகவும் நடைபெறும். போலி செய்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,
இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
2020-இல் 125 இடங்களை வென்ற NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி): BJP, JD(U) (நிதிஷ் குமார்), LJP (சிராக் பாஸ்வான்), HAM (ஜீதன் ராம் மாஞ்சி) வளர்ச்சி மற்றும் சட்டம்-ஒழுங்கை முன்னிறுத்துகிறது. கருத்துக்கணிப்புகள் 136 இடங்கள் வரை வெல்லலாம் எனக் கணிக்கின்றன.
மேலும் படிக்க : Bihar Election: வெள்ளிக்கிழமை அட்டவணை: 3 கட்டங்களாக வாக்குப்பதிவு!
RJD (தேஜஸ்வி யாதவ்), காங்கிரஸ், CPI(ML), உள்ளிட்டவற்றை கொண்ட INDIA (மகா கூட்டணி) வேலையின்மை, இளைஞர் இடம்பெயர்வு, சமூக நீதியை மையப்படுத்தி பிரச்சாரம் செய்கிறது. கடந்த 2020-இல் 110 இடங்களை பெற்ற இந்த அணி, இம்முறை 75 இடங்கள் பெறக்கூடும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
பிரசாந்த் கிஷோரின் புதிய கட்சி Jan Suraaj 13-20 இடங்கள் வெல்ல வாய்ப்பு எனவும் சில கணிப்புகள் கூறுகின்றன.