Election Commission has banned the use of the name and symbol of West Bengal Chief Minister Mamata Banerjee's Trinamool Congress party
திரிணாமூல் காங்கிரசில் பிளவு
EC Bars Mamata Banerjee Ritabrata Factions From Using Party Name Symbol Ahead Of Bypolls TMC : மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது.
இரண்டாக உடைந்த டிஎம்சி
முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அணி மற்றும் ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அணிகளும் தங்கள் தரப்பே உண்மையான அணி என்று கூறி வருகின்றன.
பெயர், சின்னம் முடக்கம்
இதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இடைக்கால நடவடிக்கையாக திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கியுள்ளது.
இடைத்தேர்தலில் பயன்படுத்த தடை
இதனால், அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நந்திகிராம் மற்றும் ரேஜினகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இரு அணிகளும் திரிணாமுல் காங்கிரஸ் பெயர் மற்றும் இரட்டை மலர் சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு இரு பிரிவினரும் தங்களுக்குப் புதிய பெயர் மற்றும் சின்னத்தை அளிக்க வேண்டும்.
மேற்கு வங்கத்தில் பரபரப்பு
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை, மேற்குவங்க அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி வி்மர்சனம்
தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து இருக்கின்றன.
===============