Election Commission released food price list to candidates contesting elections by showing their expense accounts google
இந்தியா

வேட்பாளர் செலவுக் கணக்கு : 2 இட்லி ரூ.40, அசைவம் ரூ.350, சைவம் ரூ.110 : விலைப்பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Election Commission released food price list to candidates : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு கணக்கை காண்பிக்க வசதியாக, உணவு விலைப்பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Kannan

சூடுபிடிக்கும் தேர்தல் களம்

Election Commission of India released price list to facilitate monitoring of candidates' expenses during election campaign : தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் தேர்தலை சந்திக்க உள்ளன. மூன்று மாநிலங்களில் நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கி விட்டது. தமிழகத்தில் வரும் 30ம் தேதி மனுத்தாக்கல் தொடங்குகிறது.

உணவு பட்டியல் - தேர்தல் ஆணையம்

இந்தநிலையில், தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரின் செலவு கணக்கை கண்காணிப்பதற்கு வசதியாக இந்திய தேர்தல் ஆணையம் உணவு பொருள்களின் விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த விலைப்பட்டியல் அடிப்படையிலேயே தேர்தல் செலவீனம் கணக்கிடப்படும்.

தேர்தல் கூட்டங்கள் நடத்துவதற்கு ஒற்றைச்சாளர முறைப்படி இணைய வழியில் (சுவிதா எனும் செயலியில்) 48 மணி நேரத்துக்கு முன்பு விண்ணப்பித்து குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நடத்துவதற்கு அனுமதி பெறலாம்.

பிரசாரத்தின்போது சாப்பாடு வழங்கினால் அது எந்த வகை உணவு என்பதை பொறுத்து அதற்கான செலவு பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது.

உணவு விலைப்பட்டியல் விவரம்

* அசைவ உணவு - ரூ.350

* சைவ உணவு - ரூ.110

* வெஜ் பிரியாணி - ரூ.50

* வெரைட்டி ரைஸ் - ரூ.45

* இட்லி (2 மட்டும்) - ரூ.40

* சப்பாத்தி, பூரி ( 2) - ரூ.60

* பொங்கல் - ரூ.50

* வடை - ரூ.15

* மினரல் வாட்டர் - ரூ.15

* மட்டன் பிரியாணி - ரூ.180

* சிக்கன் பிரியாணி - ரூ.110

* டீ - ரூ.12

* காபி - ரூ.18

என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறிய தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.7, வெஜிட்டபிள் உணவு மற்றும் வெரைட்டி ரைஸ் பாக்ஸ் ரூ.50, ஸ்நாக்ஸ் (உலர் பழம் தவிர்த்து) 100 கிராமுக்கு ரூ.50, இனிப்பு 100 கிராம் ரூ. 90 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரசார செலவுக்கான தொகை

இதேபோன்று, வாகனங்களுக்கும் பிரசார செலவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளுக்கு பிளாஸ்டிக் இருக்கை ஒன்றுக்கு வாடகை ரூ.11, மேஜைக்கு வாடகை ரூ.110, குஷன் இருக்கைக்கு ரூ.165, தனி சோபாவுக்கு ரூ.380 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் செலவு கணக்கீடு

கட்சிக் கொடிக்கு... எட்டுக்கு நாலடி அளவு கட்சிக் கொடி ஒன்றுக்கு ரூ. 40, வாழை மரம் ஒன்று ரூ. 750, பட்டாசு வெடித்தால் ஆயிரம் வாலாவுக்கு ரூ. 650, மேள தாளம் 4 மணி நேரம் ரூ. 6,500, குதிரைகளைப் பயன்படுத்தினால் ரூ. 6,000, கரகாட்டம், மயிலாட்டம் என 3 மணி நேரத்துக்கு ரூ.11,000 என விலைகளை நிர்ணயித்து இருக்கும் தேர்தல் ஆணையம், அதன் அடிப்படையிலேயே வேட்பாளர்களின் செலவு கணக்கு, கணக்கிடப்படும் என்று தெரிவித்துள்ளது. நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

==================