ஐந்து மாநில தேர்தல்
இந்தியாவில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலானது நடைபெற்றது. பல்வேறு தீவிர பரப்புரை பிரச்சாரங்களுக்கு பிறகு , பிரச்சாரம் ஓய்ந்து வாக்குப்பதி்வானது நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை : வழிகாட்டு நெறிமுறை
இது குறித்து முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் தமிழகத்தில் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் , அதன்படி காலை 8 மணிக்கு துவங்கும் என தெரிவித்துள்ளது.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும் , பின்னர் 8:30 மணி முதல் மின்னணு இயந்திரத்தில் ஓட்டு எண்ணும் பணி துவங்கும் எனவும் அதிகாரப்பூர்வ விளக்கமளித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்
ஐந்து மாநிலங்களுக்கான தேர்தலுல் ,அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக நடந்து நிறைவு பெற்றுள்ளது .
குறிப்பாக தமிழகத்தில் கடந்த 23ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக முடிந்து . வாக்கு எண்ணும் இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது.
முதலில் எண்ணப்படும் தபால் வாக்கு
இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அறிவிப்பின் படி , முதலில் தபால் வாக்கு பதிவுகள் எண்ணப்படும் என்றும் , பின்னர் மின்னணு இயந்திரம் மூலமா செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
வாக்குகள் எண்ணும் வழிமுறைகள் : தேர்தல் ஆணையம் வெளியிடு
* வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8:00 மணிக்குத் துவங்கும்.
* முதலில் காலை 8:00 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்
* 30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும். என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன் தான் துவங்கப்படும்.
* ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் அதற்குரிய மேசைகளில் எண்ணப்படும்.
* குறிப்பாக இந்த இரண்டிற்கும் தனித்தனியாக மேற்பார்வைக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அளவில் (ARO Level) அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
* மேலும் 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
இதுவரை பதிவான தபால் வாக்குகள்
இதுவரை சட்டபேரவை தேர்தலுக்காக மொத்தமாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையின் விவரங்கள் முறையே
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மொத்த 3.60 இலட்சம் அலுவலர்களில், வாக்காளர்களாக பதிவு செய்து, வாக்களிக்க விண்ணப்பித்த 2.88 இலட்சம் அலுவலர்கள் (80%) தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இத்துடன் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட காவல்துறை சார்ந்த அலுவலர்களும், மற்ற தேர்தல் மண்டல/துறைகளில்(Zonal/sector) பணிபுரிந்த அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்பு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களும் சேர்த்து மொத்தம் 3.36 இலட்சம் தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளாகவும்
1.10 இலட்சம் அலுவலர்கள் தேர்தல் பணி சான்றிதழ் (Election Duty Certificate) பெற்று நேரடியாக வாக்குச்சாவடியிலும், வாக்களித்துள்ளனர்.
85+ மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அளித்த படிவம் 12D விண்ணப்பத்தின் பெயரில், மொத்தம் 1.73 இலட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கு பெற்று வாக்களித்துள்ளனர். என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுவரை சேவை வாக்காளர்கள் (Service Voters) 18,000 நபர்கள் வாக்களித்துள்ளனர்.
வாக்குச்சாவடியில் வாக்களித்த வாக்காளர்கள் மட்டுமின்றி, கூடுதலாக 6.37 இலட்சம் வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக வசதிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களிடம் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
===========