ஐந்து மாநிலத் தேர்தல்
ECI likely to announe tamil nadu, puducherry, kerala, assam, west bengal Assermbly election dates on mid March : தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அசாம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது.
தேர்தல் ஆணையம் ஆய்வு
அசாமில் தேர்தல் பணிகளை முதலில் ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, தமிழகத்திலும் தேர்தல் ஆய்வு பணிகளை நிறைவு செய்து விட்டு சென்றது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையக் குழு
நாளை (மார்ச் 8) முதல் 3 நாட்களுக்கு மேற்கு வங்கத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்தக் குழுவினர் ஆய்வு செய்கின்றனர். எஸ்ஐஆர் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக உச்ச நீதிமன்றம் வரை சென்ற திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி தேர்தல் ஆணைய குழுவினரிடமும் முறையிடுவார் எனத் தெரிகிறது.
மார்ச் 15ல் தேர்தல் தேதி?
இந்த ஆய்வு பிறகு, மார்ச் 15 அல்லது 16ம் தேதி 5 மாநில தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்கு வங்கத்தில் பலகட்ட தேர்தல்
மேற்கு வங்கத்தில் 5 முதல் 7 கட்டங்களாகவும், மற்ற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் முதலில் தேர்தல்!
தேர்தலில் முதற்கட்டமாக தமிழகத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி இருப்பதால், தமிழகம், புதுச்சேரியில் முதலில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை
5 மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஒரே நாளில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு
அசாம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பாஜக அல்லாத பிற கட்சிகளும், புதுச்சேரியில் பாஜக கூட்டணி கட்சியும் ஆட்சியில் உள்ளன.
மேற்கு வங்கம், கேரளாவில் ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
=============================