நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் :
Tesla Launches First Charging Station in India : உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். இவரது டெஸ்லா நிறுவனம், மின்சார வாகனங்கள், சூரிய பேனல்கள் மற்றும் சேமிப்பு சாதனங்களை உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் 2003ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதேபோன்று விண்வெளி துறையிலும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் சாதித்து வருகிறது. சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிக் கொண்ட இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் உட்பட 2 பேரை இவரது விண்கலம் பத்திரமாக பூமிக்கு அழைத்து வந்தது.
டெஸ்லா மின்சார கார்கள் :
மின்சார கார்கள் உற்பத்தியில் சாதனை படைத்து வரும் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால்பதித்து விற்பனையை தொடங்கி இருக்கிறது. மும்பையில் இந்த நிறுவனத்தின் கார் விற்பனை மையம் அண்மையில் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் தனது முதல் சார்ஜிங் நிலையத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது டெஸ்லா. இது மின்சார வாகன உற்பத்தியாளரின் இந்திய சந்தையில் முறையான நுழைவைக் குறிக்கும் நடவடிக்கையாகும்.
டெஸ்லாவின் அறிக்கை :
இதுபற்றி டெஸ்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்தியாவில் அறிமுகமாகும் மாடல் ஓய், வெறும் 15 நிமிட் சூப்பர் சார்ஜிங் மூலம் 267 கி.மீ வரை இலக்கை அடையலாம். டெஸ்லா செயலி மூலம் பயனர்கள் சார்ஜிங்கை அணுகலாம், கண்காணிக்கலாம் மற்றும் பணம் செலுத்தலாம், இது நிகழ்நேர ஸ்டால் கிடைக்கும் தன்மை மற்றும் சார்ஜ் நிலை குறித்த அறிவிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.
மேலும் படிக்க : இந்தியாவில் கால் பதித்த ’டெஸ்லா’ : மும்பையில் ஷோரூம் திறப்பு
மும்பையில் சார்ஜிங் நிலையங்கள் :
செப்டம்பர் மாத இறுதிக்குள் மும்பை முழுவதும் லோயர் பரேல், தானே மற்றும் நவி மும்பையில் மேலும் மூன்று சார்ஜிங் நிலையங்களை செயலபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சார்ஜிங் கிடைப்பது ஒரு முக்கியமான தடையாக இருப்பவை களையப்படும். இதன் மூலம் பயனர்களுக்கு உரிய சேவை விரைவாக கிடைக்கும்” என்று டெஸ்லா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
=========