https://x.com/mansukhmandviya
இந்தியா

வருங்கால வைப்பு நிதியில் இருந்து இனி ரூ.5 லட்சம் எடுக்கலாம்

வருங்கால வைப்பு நிதியில் (EPFO) தானாக முன்வந்து பணம் எடுக்கும் வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

MTM

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதன் விபரம் : கல்வி, மருத்துவம், திருமணம் மற்றும் வீடு கட்டுவதற்காக வருங்கால வைப்பு நிதியில் இருந்து தானாக பணம் எடுக்கும் ( AUTO CLAIM ) உச்ச வரம்பு முன்பு ரூ.1 லட்சமாக இருந்தது. இனி தற்போது ரூ.5 லட்சமாக அது அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், வருங்கால வைப்பு நிதி வாடிக்கையாளர்கள் இனி எந்த தலையீடும் இன்றி எளிதாக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். பழைய செயல்முறையைப் போலவே ஆட்டோ கிளைம் மூலம் இதற்கும் மூன்று நாட்களில் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் பணம் வந்துசேரும்.

வேகமான, மிகவும் செயல்திறன் வாய்ந்த சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு தானியங்கி முறையில் தரவேண்டும் என்பதில் அக்கறையுடன் உள்ளோம் .

இவ்வாறு மாண்டவியா தெரிவித்தார்.