வருங்கால வைப்பு நிதி
வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதற்காக EPFO போர்டல் மூலம் சந்தாதரர்கள் பணம் பெற்று வருகின்றனர் , அனுதினமும் பல்வேறு மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி EPFO போர்டல் மூலம் பணம் எடுத்து வருகின்றனர்
மென்பொருள் மேம்பாட்டு பணி : தற்காலிக சேவைக்கு தடை
EPFO போர்டல் தனது இணையவழிச் சேவைகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் வழங்குவதற்காகக் கணினி அமைப்புகளை மேம்படுத்தி வருகிறது ,இதன் காரணமாக, இணையதளச் சேவைகள் 3 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 28 வரை சேவையானது இயங்காது
அதன்படி, மென்பொருள், தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் காரணமாக இன்று முதல் வருகிற 28-ந்தேதி EPFO போர்டல் மூலமான சேவைகள் அனைத்தும் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது
புதிய ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த இயலாது
இந்த தற்காலிக தடை காரணமாக, புதிய PF Claim-கள், முன்பணம், கணக்கு பரிமாற்றம், வைப்பு நிதி சம்மந்தப்ப்ட்ட எந்த சேவையும் பயன்படுத்த் இயலாது என்று தெரிவித்துள்ளது
மேலும் எந்த சேவைகளுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது
மாற்றுத் தேவைகளுக்கு 14470 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளஅறிவுறுத்தல்
வருங்கால வைப்பு நிதி குறித்து ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட Claim-கள் ரத்து செய்யப்படாது என்றும், மாற்றுத் தேவைகளுக்கு SMS, Missed Call, ஹெல்ப்லைன் (14470) வாட்ஸ்அப் மூலம் அணுகலாம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
====================