Eyes of woman killed in elephant fight donated, resilience in grief  google
இந்தியா

யானை சண்டையில் உயிரிழந்த பெண்ணின் கண்கள் தானம் : சோகத்திலும் நெகிழ்ச்சி, கணவனுக்கு குவியும் பாராட்டு....

கர்நாடகா சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த பெண் யானைகள் மோதலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது

Rohini

கர்நாடகாவில் யானை மோதலில் உயிரிழந்த பெண்

கர்நாடகா சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த பெண் யானைகள் மோதலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

கர்நாடகாவில் யானைகள் மோதலில் சிக்கி சென்னையை சேர்ந்த பெண் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவத்தின் சோகக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரை பற்றிய விவரம்

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த 33 வயதான ஜூனேஷ் என்ற பெண், தன் கணவர் மற்றும் 6 வயது மகளுடன் கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் ,இரண்டு நாட்கள் கர்நாடகாவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுற்றிப்பார்த்த ஜூனேஷ்,

இறுதியாக குடகு மாவட்டத்தில் உள்ள துபரே யானைகள் முகாமிற்கு சென்றுள்ளனர் இந்த நிலையில் அங்கு , யானைகளுக்கிடையே ஏற்ப்பட்ட மோதல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்

யானைகளிடையே ஏற்பட்ட மோதல்

யானை கஞ்சன் தாக்கியதில் நிலைகுலைந்த மார்த்தாண்டா யானை, கரையோரம் நின்றிருந்த ஜூனேஷ் மீது விழுந்தது. இதைக் கண்டு பதறிப்போன ஜூனேஷின் கணவர் ஜோயல், ஒரு கையில் தனது மகளையும், மற்றொரு கையில் மனைவியையும் காப்பாற்ற போராடினார்.

இருப்பினும் கஞ்சன் யானையின் தொடர் தாக்குதலால் எழுந்திருக்க முடியாமல் மார்த்தாண்டா யானை தவிக்க, அதன் அடியில் மாட்டிக் கொண்ட ஜூனேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கூறிய அவரது கணவர்

இந்த சம்பவம் குறித்து கூறிய அவரது கண்வர் ,சம்பவ இடத்தில் இருந்து சுற்றுலா பயணிகளை உடனடியாக அப்புறப்படுத்திய வனத்துறையினர் ஜூனேஷின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

உயிருக்கு போராடிய தன் மனைவியை காப்பாற்ற யாரும் முன்வராதது கடும் மன வேதனையை ஏற்படுத்துவதாக ஜூனேஷின் கணவர் ஜோயல் மனம் உடைந்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு இழப்பீடு அறிவிப்பு

உயிரிழந்த ஜூனேஷின் குடும்பத்திற்கு கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கந்த்ரே இரங்கல் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் . உயிரிழந்த ஜூனேஷின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் இழப்பீட்டு தொகையை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

தானம் செய்யப்பட்ட உயிரிழந்த பெண்ணின் கண்கள்

இந்த சோகத்திலும் உயிரிழந்த ஜூனேஷின் கண்களை தானமாக கொடுப்பதாக அவரது கணவர் ஜோயல் தெரிவித்து இருக்கிறார் . அதன்படி, ஜூனேஷின் கண்கள் அறுவை சிகிச்சை செய்து தானமாக பெறப்பட்டது.

தனது மனைவி இந்த உலகை விட்டு சென்ற சோகத்திலும், மனைவியின் கண்கள் மூலம் மற்றவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து உலகை காண வேண்டும் என எண்ணிய ஜோயலின் செயல் பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

===================