வெளிநாட்டு பணத்திற்கு கட்டுப்பாடு :
வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எப்சிஆர்ஏ மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (ஜேபிசி) அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
வெளி நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் தொண்டு நிறுவனம் மூலம் வரும் பணத்தை ஒழுங்குமுறை படுத்த எப்சிஆர்ஏ எனும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது .
இதில் கவனிக்க வேண்டிய விசியம் என்னவென்றால் ஆண்டு தோறும் இந்தியாவிற்குள் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல கிறிஸ்துவ ,இஸ்லாமிய அமைப்புகளுக்கு கிடைத்து கொண்டு இருக்கிறது.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு :
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி ,சமாஜ்வாதி போன்ற காட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ,மத்திய அரசு இதனை இந்த மழை கால கூட்டத்தொடரில் அமல்படுத்தாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல்
ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த சில கட்சிகளும் மசோதா குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளன.
நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு மசோதா அனுப்பிவைப்பு :
எதிர்க்கட்சிகள் மற்றும் இதர கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுகுழுவிற்கு அனுப்பிவைக்க படுவதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது எனவே இதனின் அடுத்த கட்ட நடவடிக்கை போக போகத்தான் தெரியும் என தெரிவிக்கிறார்கள் .
தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு :
தமிழகத்தை பொறுத்த வரை இங்கு இருக்க கூடிய பிரதான கட்சிகளான TVK,DMK,CPM,CPI,IUML DMDK போன்ற பல்வேறு கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து வருகிறது அவர்கள் தரப்பில் கூறப்படுவது என்னவென்றால் இந்த சட்ட மசோதாவானது சிறுபான்மையினருக்கு எதிரானது மற்றும் அவர்களின் வலிமையை நசுக்க கூடிய ஒரு செயல் என கூறுகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துகள்
எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துகள் :
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் Derek O'Brien, இந்த மசோதா ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு கல்வி, சுகாதார சேவைகள் வழங்கும் அமைப்புகளை பாதிக்கக்கூடும் என்றும், "அரசுக்கு அதிக அதிகாரம் வழங்குகிறது" என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. Manish Tewari, மசோதா "dangerous" மற்றும் "draconian" எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தார்.