First Time Special Coin released by PM Modi to mark the centenary of the RSS with photograph of Bharat Mata 
இந்தியா

முதன்முறையாக சிறப்பு நாணயத்தில் பாரத மாதா! : மத்திய அரசு சிறப்பு

Bharat Mata Photo in RSS Centenary Coin : ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பிரதமர் மோடி வெளியிட்ட சிறப்பு நாணயத்தில், பாரத மாதா புகைப்படம் இடம்பெறுவது இதுவே முதன்முறை.

Kannan

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா :

Bharat Mata Photo in RSS Centenary Coin : ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம், 1925ல் விஜயதசமி நன்னாளில் மஹாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் துவக்கப்பட்டது(RSS Origin Year). இந்த இயக்கத்தை, டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் நிறுவினார்.இந்த இயக்கத்தின் நுாற்றாண்டு விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒற்றுமையே நமது வலிமை - பிரதமர் மோடி

டெல்லியில் நடைபெற்ற விழாவில், பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு, ஊடுருவல் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற சித்தாந்தத்தில் தான் தேசத்தின் ஆன்மா புதைந்து இருக்கிறது. இந்த சித்தாந்தம் உடைக்கப்பட்டால் தேசம் பலவீனமாகி விடும் என்றும் அவர் கவலை தெரிவித்தார் துள்ளார்.

நாணயம், அஞ்சல் தலை வெளியீடு

இந்த விழாவில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக சிறப்பு நாணயம் மற்றும் அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். ரூ.100 மதிப்பு கொண்ட நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேசிய சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில், சிம்ம வாகனத்தில் வரத முத்திரையுடன் பாரத மாதா இருக்கும் படமும், அவரை ஆர்எஸ்எஸ் சேவகர்கள் மரியாதையுடன் வணங்குவது போன்ற உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.

பாரத மாதா உருவத்துடன் நாணயம்

இந்த நாணயத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா என்ற வாசகம் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும்,' அனைத்தும் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கே அனைத்தும் சொந்தம். என்னுடைய எதுவும் இல்லை' என பொருள்படும் ' Rashtriya Swaha, Idam Rashtraya, Idam Na Mama' என்ற வாசகமும் பொறிக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க : RSS Centenary Stamp: அஞ்சல் தலை வெளியீடு! : பிரதமர் மோடி பெருமிதம்

இந்த அமைப்பு துவங்கப்பட்ட 1925 மற்றும் தற்போதைய 2025ம் ஆண்டும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு நாணயத்துடன் வெளியிடப்பட்ட அஞ்சல் தலையிலும், '1963ம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது நடந்த அணிவகுப்பில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பங்கேற்ற புகைப்படம்' இடம்பெற்றுள்ளது. இந்திய நாணயத்தின் பாரத மாதாவின் உருவம்(Bharat Mata Photo in RSS Centenary Coin) இடம் பெறுவது இதுவே முதன்முறை. இதன் மூலம் நாட்டிற்கே மத்திய பாஜக அரசு பெருமை சேர்த்து இருக்கிறது.

==================