ANI
இந்தியா

விமான விபத்து : பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம்

குஜராத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி நிவாரணம் அறிவித்துள்ளது டாடா நிறுவனம்

Kannan

அகமதாபாத் விமான விபத்தில் 141 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், அவற்றை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படுகிறது.

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பயணித்த ஏர் இந்தியா விமானம் கட்டிடம் மீது விழுந்து நொறுங்கி, விபத்துக்குள்ளானது.

இந்தநிலையில், விபத்தில் உயிரிழந்த விமான பயணிகளின் குடும்பத்திற்கு டாடா நிறுவனம் நிவாரணம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது.

இதுபற்றி அந்த குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கட்டான தருணத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை ஆதரிப்பதில் முழு கவனம் செலுத்துகிறோம்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.