ANI
இந்தியா

ராசி நம்பரான சீட் எண் 11A - முன்பதிவுக்கு முந்தும் பயணிகள்

ஏர் இந்தியா விமான விபத்தில் தப்பிய நபர், சீட் எண் 11Aல் பயணித்ததால், அந்த எண் உலகம் முழுவதும் ராசியான நம்பராக மாறி இருக்கிறது.

Kannan

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில், விஸ்வாஸ்குமார் என்ற தொழிலதிபர் மட்டும் உயிர் தப்பினார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், லண்டனில் கடை நடத்தி வருகிறார். இவர் விமானத்தில் 11A இருக்கையில் அமர்ந்து பயணித்தார்.

தற்போது இந்த இருக்கை எண் உலகளவில் அதிர்ஷ்ட எண்ணாக மாறி இருக்கிறது.

ட்ரீம்லைனர் விமானங்களில் இந்த இருக்கை, உயர்தர வகுப்பிற்கு அடுத்த ஜன்னல் அருகே அமைந்து இருக்கும்.

அவசர கதவுக்கு அருகே அமைந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், விமானத்தின் இறக்கை பகுதிக்கு அருகே இந்த சீட் இருப்பதால், மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

அகமதாபாத் விமான விபத்தை பொருத்தவரை, 11A இருக்கை பலமான பகுதியில் இருந்ததால், உடையவில்லை.

விஸ்வாஸ்குமார் உயிர்தப்ப இது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் 11A இருக்கை உலகின் ராசியான நம்பராக மாறி இருக்கிறது. இந்த இருக்கையை முன்பதிவு செய்ய பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

=====