FM Nirmala Sitharaman Reply To Rajya Sabha MP Kamal Haasan Speech in Parliament Source : Sansad TV
இந்தியா

தமிழ் யாசகத்திற்கு கூட உதவாது- கமலின் புகாருக்கு நிர்மலா பதில்!

Nirmala Sitharaman Reply To Kamal Haasan Speech in Parliament : மக்களவையில் பேசிய கமல்ஹாசனின் உரைக்கு மறுப்புத் தெரிவித்து எக்ஸ் தளத்தில் நிர்மலா சீதாராமன் அலுவலகம் மறுபதில்

Rohini

கமல்ஹாசன் உரை

Nirmala Sitharaman Reply To Kamal Haasan Speech in Parliament : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்கி நடந்து வரும் சூழலில் முதன் முறையாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசஉரையாற்றிர்.மாநிலங்களவையில் அவர்ஆற்றும் முதல் உரை என்பதால் கூடுதல் கவனம் பெற்றது.

முதல் உரையில் கூறியதாவது

எனது கவலையெல்லாம் வரகும் தேர்தலை பற்றியதுதான் என்றும் எங்களின் தற்போதைய நிலையை 'உயிரோடு இருப்பவர்களின் மரண வாக்குமூலம்' என்று அழைக்கிறேன். நாங்கள் வாக்களிக்க விரும்புகிறோம், என்றும் ,ஆனால் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எங்களது வாக்கு உரிமைகளுக்கே கேள்விகுறியாக்கும் ஒன்றாக இருந்து வருகிறது என்று குறிப்பிட்டு பேசினார் .

மம்தாவை மேற்கோள்காட்டி

பீகார் ஏற்கனவே பல 'வாழும் பிணங்களின்' (வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள்) தேசமாகிவிட்டது.

இந்த நோய் நாடு முழுவதும் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை என்றும் வங்காளத்தைச் சேர்ந்த எனது சகோதரியும் இதையேதான் புலம்புகிறார். இதற்காக அவர் உச்ச நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட ஒரு கோடி 'வாழும் பிணங்கள்' காகித அளவில் உருவாக்கப்பட்டு விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் தேர்தல் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் குறித்தான நிலைபாட்டை தெரிவித்தார் .

தமிழ் குறித்து பேச்சு

தனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர்தான் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணா என்றும் குறிப்பிட்டிருந்தார் .

மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீதான ஆக்கிரமிப்பையும் எப்படி எதிர்கொள்வது என்று அவர் கற்றுக்கொடுத்திருப்பதாகவும் கூறி தன்னுடைய உரையை மொழிந்தார் .

சர்ச்சை பேச்சு

இன்று தமிழை, தமிழரை பார்த்து தமிழ் மொழி பிச்சை எடுக்கக்கூட உதவாது என்கிறீர்கள். அது ஓரளவு உண்மைதான் என்றும், எந்த அரசாங்கமும் ஆட்சியதிகாரத்தில் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்க முடியாது என்று கூறியிருந்தார் .

சொந்த கருத்து அல்ல

மக்களவையில் பேசிய கமல்ஹாசனின் உரைக்கு மறுப்புத் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நிர்மலா சீதாராமன் அலுவலகம், கடந்தாண்டு மார்ச் மாதம், பெரியார் கூறிய கூற்றையே நிதியமைச்சர் மேற்கோள் காட்டியதாக வீடியோ ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளது. எனவே, யாசகம் எடுக்கக் கூட தமிழ் உதவாது என்பது நிர்மலா சீதாராமனின் சொந்த கருத்து அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.